Sunday, April 20, 2008

வைகோவுக்கு கருணாநிதி சவால்

இலங்கைப் பிரச்சினை தொடர்பில் முதலில் அ.தி.மு.க.வின் ஆதரவை பெறுங்கள்
வைகோவுக்கு கருணாநிதி சவால்

தி.மு.க. ஆட்சியை அகற்ற முதல் இலங்கைப் பிரச்சினை மற்றும் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பில் தனது தோழமைக் கட்சியான அ.தி.மு.க. வின் ஆதரவைப் பெறட்டும் என வைகோவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கம்யூனிஸ்ட்டுகளை விமர்சிக்கும் துணிவு முதல்வருக்கு உள்ளதா என பா.ஜ.க. தலைவர் இல. கணேசன் கேட்டுள்ளதற்கு பதிலளிக்கும் முகமாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, விலைவாசி உயர்வு குறித்து கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் பேரவையிலிருந்து வெளி நடப்பு செய்தபோது, அதற்காக வருத்தப்படு கிறேன் என்றும், வெளிநடப்புச் செய்தது பொருத்தமானதல்ல என்றும் பேரவையிலேயே விமர்சித்திருக்கிறேன்.

தி.மு.க. ஆட்சியை அகற்ற அ.தி. மு.க.வுடன் இணைந்து மக்கள் சக்தியைத் திரட்டப் போவதாக வைகோ கூறியுள்ளார்.

சேது சமுத்திரத் திட்டம், இலங்கைப் பிரச்சினை போன்றவற்றில் அவருடைய தோழமைக் கட்சியான அ.தி.மு.க.வின் ஆதரவைப் பெற முதலில் முயற்சிக்கட்டும்.

No comments: