
மதத்தின் பெயரைச்சொல்லி உலக மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் கொலைக்கும்பலின் ஈராக்கிய தலைவன் அபு அயுப் அல் மாஸ்ரி
ஜனாதிபதி புஷ்ஷிற்கு அமெரிக்கர்களின் தலைகளை பரிசாக வழங்குங்கள் ஈராக்கிற்கான அல்கொய்தா தலைவர் ஆதரவாளர்களுக்கு அழைப்பு
ஈராக்கிலுள்ள அல்கொய்தாவின் தலைவர்களிலொருவனான அபு அயுப் அல் மாஸ்ரி என்றழைக்கப்படும் அபு ஹம்ஸா அல் முஹாஜிர், அமெரிக்க படையினருக்கு எதிரான பிரதான போராட்ட நடவடிக்கையொன்றை எதிர்வரும் வாரங்களில் முன்னெடுக்க தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளான்.
"எமது எதிரிகள் (அமெரிக்கா) ஈராக்கில் பலியான தமது படையினரின் எண்ணிக்கை 4000 இனை எட்டியுள்ளதாக பிரகடனப்படுத் தியமையையொட்டியே நான் இந்த உரையை ஆற்றுகிறேன்" என இணையத் தளத்தில் வெளியிட்ட தனது உரையில் அபு ஹம்ஸா அல் முஹாஜிர் குறிப்பிட்டிருந்தான்.
"இச் செய்தியை நீங்கள் செவிமடுக்கும் நேரத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் எமது குழுவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அமெரிக்கர் ஒருவரின் தலையை ஏமாற்றுக்கார (ஜனாதிபதி புஷ்ஷிற்கு) பரிசாக வழங்க வேண்டும் என எமது வீரர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்" என அவர் அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தான்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை வரை ஈராக் போர் காரணமாக 4, 036 அமெரிக்க படையினர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க மற்றும் ஈராக் படையினருடன் இணைந்து ஈராக்கிலுள்ள அல்கொய்தா போராளிகளுக்கு எதிரான இராணுவ நடவ டிக்கையில் பங்கேற்கும் ஈராக்கிய எழுச்சி சபையின் அங்கத்தவர்கள் மீதும் தாக்குதலை நடத்த அபு ஹம்ஸா அல்முஹாஜிர் தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளான்.

No comments:
Post a Comment