ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு அடுத்த வாரமளவில் விடுதலையளிக்கப்படலாம் என அவரது வழக்கறிஞர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இவரை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இவ்வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது 1991ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி அன்று இடம்பெற்ற ராஜீவ் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட் டில் கைதாகி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இவருக்கு பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் தான் எனினும் நளினி அதையும் தாண்டி 3 ஆண்டுகள் மேலதிகமாக சிறையில் இருந்து வருகிறார்.
அவரை விடுவிக்கக் கோரி பலமுறை மனுத்தாக்கல் செய்யப்பட்டன. எனினும் இம்மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நளினியை பிரியங்கா சென்று வேலூர் சிறையில் சந்தித்துள்ளதை யடுத்து மீண்டும் அவரை விடுதலை செய்யக் கோரி உயர் நீதிமன்றில் வழக்குத் தொட ரப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இம்முறை நளினி விடுதலை செய்யப்படலாம் என அவரது வழக்கறிஞர் மீண்டும் நம்பிக்கை தெரிவித் துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment