Sunday, April 20, 2008

பிரியங்கா-நளினி சந்திப்பில் பேசியது என்ன? மர்ம நபர்கள் ஆர்வம் காட்டுவதால் பரபரப்பு

ராஜிவ் கொலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினியை,
பிரியங்கா சந்தித்து பேசிய விபரங்களை தெரிந்து கொள்ள மர்ம நபர்கள்
முயற்சிப்பதால், வேலூர் பெண்கள் சிறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நளினியை பிரியங்கா சந்தித்து பேசியதற்கான காரணங்கள் குறித்து, பல்வேறு
விவாதங்கள் எழும்பியுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள பண வீக்கம், விலைவாசி
உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள், காங்கிரஸ் அரசுக்கு தலைவலியை
ஏற்படுத்தியுள்ளன. அடுத்த ஆண்டு நடக்கும் பார்லிமென்ட் தேர்தலில்
வெற்றியை பாதிக்கும் என்பதால், பிரச்னையை திசை திருப்பும் நோக்கில் இந்த
சந்திப்பு நடந்ததாக அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு எழுந்துள்ளது.


/>

பிரியங்கா- நளினி சந்திப்பின் போது பேசியதாக சில தகவல்
மட்டுமே வெளியாகியுள்ளன.  பெரும்பாலான தகவல் மறைக்கப்
பட்டுள்ளன. ராஜிவ் கொலையில் முக்கிய பங்கு வகித்தவர், அவர் சார்ந்துள்ள
கட்சி, கொலைக்கு சதி திட்டம் தீட்டியவர் யார், என்பதை பிரியங்கா தெரிந்து
கொள்ள விரும்பியுள்ளார். அதனால் தான், இந்த சந்திப்பு நடந்ததாகவும் தகவல்
வெளியாகியுள்ளன. ராஜிவ் கொலைக்கு, உடந்தையாக இருந்த கட்சிகளை
காங்கிரஸ் கைகழுவி விடவும் இருக்கிறது. அதனால், பிரியங்கா- நளினி
சந்திப்பின் போது பேசிய முழு விபரங்களையும், அறிந்து கொள்ள சில
கட்சிகள் முழு ஆர்வம் காட்டி வருகின்றன. அதற்காக சில நாட்களாக, மர்ம
நபர்கள் நளினியை சிறையில் சந்தித்து பேச மனு போட்டுள்ளனர்.
 ஆனால், நளினி யாரையும் சந்திக்க விரும்பவில்லை. முருகன்- நளினி
இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அதனால், முருகனை சந்திக்கவும் சிலர்
முயற்சித்து வருகின்றனர். இருவரும் புதிய நபர்களை சந்திக்க தொடர்ந்து
மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பத்திரிகையாளர்கள்
போர்வையில் அவர்களை சந்தித்து பேச்சு கொடுக்கவும் சிலர் முயற்சித்து
வருகின்றனர். இதை கவனிக்க தவறிய சிறை அதிகாரிகள் மீது, நடவடிக்கை
எடுக்கப்படும் எனவும் சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  தொடர்ந்து,
சிறை பகுதியில் உளவுத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நளினி
விடுதலை செய்யப்படுவாரா? ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை
விதிக்கப்பட்டு, தண்டனை காலம் முடிந்த நிலையிலும் சிறையில் இருக்கும்
நளினி விரைவில் விடுதலை செய்யப்படலாம் என தகவல்
வெளியாகியுள்ளது.



நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு
தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றியதில் பெரும் பங்கு
சோனியாவுக்கு உண்டு. அதிலிருந்து நன்றி பாராட்டும் விதமாக, நளினி
தொடர்ந்து கடிதம் எழுதி வந்தார். அதையடுத்து தான் பிரியங்கா, நளினியை
சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.அதை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய
உள்துறை அமைச்சக அதிகாரிகள், தமிழக அதிகாரிகளிடமிருந்து நளினி
சம்பந்தமான அனைத்து கோப்புகளையும் அனுப்பும் படி உத்தரவிட்டுள்ளனர்.
வேலூர் சிறை அதிகாரிகளும் அவற்றை அனுப்பி வைத்துள்ளனர்.மேலும்
தமிழக உள்துறை அதிகாரிகளும், நளினி சம்பந்தப்பட்ட அனைத்து
கோப்புகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.



/>

 நளினி தரப்பில் வக்கீல்கள் உள்துறை அதிகாரிகளை சந்தித்து,
நளினியை சிறையில் இருந்து விடுவிக்கும்படி மனு அளித்துள்ளனர். மனுவை
ஆய்வு செய்து, விரைவில் நளினி விடுவிக்கப் படலாம் என தகவல்
வெளியாகியுள்ளது. அதற்கு சோனியாவும் ஆதரவு தருவார் எனவும்
கூறப்படுகிறது. சிறையில் இருந்த படியே, நளினி எம்.சி.ஏ., படித்துள்ளார். அவர்
சிறையில் இருந்து வெளிவந்தால், வேலை தரவும் பல்வேறு நிறுவனங்கள்
தயாராக உள்ளன.

No comments: