Thursday, April 17, 2008

கைவிலங்கிடப்பட்ட கொள்ளையன் பொலிஸ் வாகனத்துடன் மாயம்

அவுஸ்திரேலியாவில் சம்பவம்

கொள்ளைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், கை விலங்குடன் பொலிஸாரின் வாகனமொன்றை கடத்திச் சென்ற சம்பவம் அவுஸ்திரேலிய பிரிஸ்பன் நகரில் இடம் பெற்றது.
மார்க் ரொபேர் நொலான் (29 வயது) என்ற இந்த நபரை கைது செய்த பொலிஸார், அவரை விலங்கிட்டு தமது வாகனத்தின் பின் பகுதியில் அடைத்துவிட்டு மேலும் சில ஆதாரங்களைத் தேடி புறப்பட்டனர்.

இந்நிலையில் மேற்படி நபர் வாகனத்தின் பின் ஆசனத்திலிருந்து ஒருவாறாக சாரதி ஆசனத்துக்கு தாவிக் குதித்து, கை விலங்குடனேயே காரைச் செலுத்தி தப்பிச் சென்றுள்ளார்.

தற்போது பொலிஸ் வாகனத்துடன் மாயமாகிய மார்க் ரொபேர் நொலானைத் தேடி குயீன்ஸ்லான்ட் பொலிஸார் வலை விரித்துள்ளனர்.

No comments: