
அமெரிக்க மாயாஜால வித்தை நிபுணர் டேவிட் பிளெய்ன் (35 வயது), நீருக்கடியில் 17 நிமிடங்கள் 2 செக்கன்கள் மூச்சை அடக்கியிருந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். 8200 லீட்டர் நீர் நிரப்பப்பட்ட கோள வடிவ தண்ணீர் தொட்டியில் மூழ்கியிருந்தே, இந்த சாதனையை அவர் நிறைவேற்றியுள்ளார்.
100 அடி உயரமான துருவப் பனிப்பாறையில் ஏறியமை, இரண்டரை நாட்களாக பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்தமை, 44 நாட்கள் பெட்டியொன்றில் உணவு எதுவுமின்றி அடைபட்டு கிடந்தமை போன்ற சாதனைகளை டேவிட் பிளெய்ன் ஏற்கனவே வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment