Wednesday, May 14, 2008

17 குழந்தை பெற்ற பெண்ணின் சாதனை இன்னும் தொடர்கிறது

ஆர்கன்சாசை சேர்ந்த பெண், இதுவரை 17 குழந்தைகள் பெற்று, தற்போது 18வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். ஆர்கன்சாசின் வடமேற்கு பகுதியில் உள்ளது டான்டிடவுன். இங்கு வசிப்பர் மிச்லே; வயது 41. இவரது கணவர் டுகார். இந்த தம்பதி, இனப்பெருக்கத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுவரை மிச்லேவுக்கு 17 குழந்தைகள் பிறந்துள்ளன. தற்போது, மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். டான்டிடவுனில், குழந்தைகள் சுதந்திரமாக விளையாட வேண்டும் என்பதற்காக 7,000 சதுர அடியில் பிரமாண்ட வீட்டை கட்டியுள்ளார் டுகார்.



17 குழந்தைகளும் இங்கு ஓடிப்பிடித்து விளையாடுகின்றனர். மிச்லேயின் குழந்தைகளில் 10 பேர் ஆண்கள்; ஏழு பேர் பெண்கள். மூத்த குழந்தை ஜோஷ்ஷுக்கு 20 வயதாகிறது. கடைசியாக பிறந்த குழந்தையின் வயது ஒன்பது மாதம். எல்லா குழந்தைகளின் பெயர்களும், "ஜே' என்ற ஆங்கில எழுத்தில் துவங்கும்படி வைத்துள்ளனர். குழந்தைகளில் மூன்று பேர் டிசம்பர் மாதமும், மூன்று பேர் ஜனவரி மாதமும் பிறந்தவர்கள். எனவே, இந்த இரண்டு மாதங்களில் அடுத்தடுத்து பிறந்தநாள் கொண்டாடுவதில் மிச்லே - டுகார் தம்பதி படு பிசியாக இருப்பர். இத்தம்பதியின் குழந்தைகள் தனியாக பள்ளிக்கு செல்வதில்லை; வீட்டுக்கு வந்து ஆசிரியர்கள் பாடம் சொல்லித் தருகின்றனர்.

No comments: