வளர்ப்பு மகனை பார்க்க ஆசைப்பட்டு, லியான் பிங் குக்கு புறப்பட்டார். ரயில் நிலையத்தில் அவரது பை திருடு போய்விட்டது. டிக் கெட் எடுக்க பணம் இல்லை. டெய்ஹி ரயில் நிலையத்தில் இருந்து நடக்கத் துவங்கினார். பசிக்கும் போது, மற்றவர்களிடம் பிச்சை எடுத்து சாப்பிட்டார். 71 நாட்களுக்கு பின், அவர் லியான்பிங் நகருக்கு வந்து சேர்ந்தார். சிறையில் இருக்கும் தனது மகனைப் பார்த்த அந்த முதியவர், "மனம் தளரவிடாதே, விரைவில் விடுதலையாகி விடுவாய்' என்று ஆறுதல் கூறினார்.இவரது கதையை அறிந்த சிறை காவலர்கள், தங்கள் மத்தியில் பணம் திரட்டி, அவருக்கு ரயில் டிக்கெட் வாங்கிக் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
Wednesday, May 14, 2008
71 நாள் நடந்தே சென்றார் 72 முதியவர்
சீனாவை சேர்ந்த 72 முதியவர், சிறையில் அடைக்கப் பட்டுள்ள தனது வளர்ப்பு மகனை பார்ப்பதற்காக 71 நாள் நடந்தே சென்றார். சீனாவில் உள்ள ஆன்கூய் மாகாணம், டெய்ஹி நகரை சேர்ந்தவர் ஷீ பெய். இவர் குவானங்டாங் மாகாணத்தில் உள்ள லியான் பிங் நகரில் உள்ள சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இவருக்கு பெற்றோர் கிடையாது. 72 வயது முதியவர் அவரை தத்துப் பிள்ளையாக அன்புடன் வளர்த்து வந்தார். ஷீ பெய்யிடம் அதிக பாசம் வைத்திருந்தார் அவரது வளர்ப்பு தந்தை. சிறையில் அடைக்கப்பட்ட மகனை, இரண்டு ஆண்டுகளாக பார்க்க முடியாமல் தவித்தார் அவர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment