Wednesday, May 28, 2008

புலிகளுடன் தொடர்புகளை உடன் நிறுத்தும்படி தென்னிந்திய கட்சிகளுக்கு இந்திய அரசு எச்சரிக்கை

அண்மையில் இந்திய மத்திய அரசு தரப்பில் தமிழ்நாடு அரசியல் கட்சியைச் சேர்ந்த முன்னணித் தலைவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் ஷ்ரீலங்காவில் இயங்கும் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகள் வைத்திருப்பதுபற்றிய தகவல்களை இந்திய பொலிஸ் புலனாய்வுத் தரப்பு வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்தே இவ்வாறு புலிகள் இயக்கதுடன் வைத்திருக்கும் தொடர்புகளை உடனடியாக நிறுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படியாகவும் குறித்த தென்னிந்தியக் கட்சிகளின் தலைமைப் பீடங்களுக்கு இந்திய மத்திய அரசு இந்த கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளதாகவும் இந்திய வட்டாரங்களிலிந்து வெளியாகிய செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மேலும் தெரிய வந்துள்ள தகவல்களுக்கேற்ப கடந்த சில வாரங்களில் இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் மற்றும் புலிகள் இயக்கத்துக்கு நிதி உதவி மற்றும் ஆதரவுகளை வழங்கும் முக்கிய நபர்கள் ஆகியோரிடம் இந்தியப் பொலிஸார் மேற்கொண்ட தீவிர புலன்விசாரணைகளின் போதே இவ்வாறு தென்னிந்திய கட்சிகளின் தலைமைத்துவத்துடன் அவர்களுக்கு இந்த நெருங்கிய சம்பந்தம் பற்றிய தகவல் கிடைத்துள்ளதாகவும் இந்திய தூதரக வட்டாரச் செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது. மேற்படி புலிகள் இயக்கப் பயங்கர வாதிகள் இந்தியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வேளையில் அவர்களிடம் வெடிகுண்டு, இரசாயனங்கள், ஜெலக்நைற் முதலிய குண்டு தயாரிப்புக் பொருட்கள் தகவல் பறிமாற்றத்துக்கான `வோக்கி ரோக்கி’ உட்பட உபகரணங்கள் மற்றும் எரிபொருள் கலங்கள் என்பன பெரும் தொகையில் இருந்ததாகவும் இவற்றை அவர்கள் ஷ்ரீலங்காவில் இயங்கும் புலிகள் இயக்கத்தினர்களுக்கு வழங்குவதற்காக சேகரித்து வைத்திருந்ததாகவும் இவ்வாறு அவற்றைப் படகுகள் மூலம் ஷ்ரீலங்காவுக்கு எடுத்துச் செல்லத் தயாராக இருந்த வேளையிலேயே கைது செய்ப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதனை இந்திய பொலிஸ் தரப்பு புலன் விசாரணைகளிலிருந்து உறுதிசெய்துள்ளது. அத்துடன் இவர்கள் தென்னிந்தியக் கட்சிகளின் தலைமைத்துவ பிரமுகர்களுடன் வைத்திருந்த நெருங்கிய தொடர்புகளையும் இந்திய புலனய்வுத் தரப்பு விசாரணைகள் மூலம் உறுதி செய்துள்ளது.


இவ்வாறு கைது செய்யப்பட்ட தென்னிந்தியாவில் இயங்கும் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு தென்னிந்தியக் கட்சிகளின் பெயர் குறிப்பிடப்படாதாக பிரமுகர்களுடன் நிதி உதவி, ஆயுத சேகரிப்பு உதவி மற்றும் தொடர்புகள் சம்பந்தமாக நெருங்கிய சம்பந்தம் இருப்பது பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை இந்திய பொலிஸ் தரப்பு மத்திய அரசுக்கு அறிவித்த பின்னரே மேற்படி எச்சரிக்கைகளை தென்னிந்திய கட்சிப் பிரமுகர்களுக்கு மத்திய அரசு விடுத்துள்ளது.

மேலும் தென்னிந்தியாவில் புலிகள் இயக்கதினருக்கும் தென்னிந்தியக் கட்சித் தலைமைத்துவத்திற்கும் இடையில் தொடர்ந்தும் நெருங்கிய உறவுகள் இருப்பதாக இந்திய புலனாய்வுத்துறை உறுதிப்படுத்த மத்திய அரசுக்கு அவசரமாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து மத்திய அரசு குறித்த தென்னிந்தியக் கட்சிகளுக்கு மட்டுமன்றி தமிழ்நாடு மாநில அரசுக்கும் இதுபற்றி அறிவித்து இவ்வாறு புலிகள் இயக்கப்பயங்கர வாதிகளுடன் கட்சிகளுக்கு இருக்கும் தொடர்பை நிறுத்த அவசர நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளது.

No comments: