டான் ரிவிக்கு எதிரான நடவடிக்கைகளை புலிகள் ஆரம்பித்திருப்பதாக தெரியவந்திருக்கின்றது.புலிகளுக்கு எப்போதும் சிம்மசொப்பனமாக இருந்து வருபவர் குகநாதன்.பாரிஸ் நகரில் குகநாதன் ஈழநாடு பத்திரிகையை ஆரம்பித்தபோது புலிகளின் ஊதுகுழல்போலவே வெளிவரத் தொடங்கியது. ஆனாலும் புலம்பெயர் மண்ணில் ஒரு தமிழ்ப் பத்திரிகை ஒன்றின் தேவை இருந்ததால் அதன் விற்பனை கொடிகட்டிப்பறந்தது. கூடவே குகநாதனும் தனிப்பட்டவகையில் ஹீரோ ஆனார். ஒரு காலத்தில் புலி ஆதரவாளர்கள் எவரது பரதநாட்டிய அரங்கேற்றம் என்றாலும் மற்றும் விழாக்கள் என்றாலும் குகநாதனே பிரதம விருந்தினர் என்ற அளவிற்கு அவரது தனிப்பட்ட புகழ், புலிகளின் கண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த அவர்கள் ஈழமுரசு பத்திரிகையை போட்டியாக ஆரம்பித்தனர். குகநாதன் ரிஆர்ரி வானொலியை ஆரம்பித்தபோது அவருக்குப் போட்டியாக ஐபிசி வானொலியை புலிகள் தொடங்கினார்கள். பின்னர் அவர் ரிஆர்ரி தமிழ்ஒளி தொலைக்காட்சியைத் தொடங்கியபோது கொதித்துப்போன புலிகள் தாமும் தொலைக்காட்சியைத் தொடங்காமல், குகநாதனின் தொலைக்காட்சியையே கபளீகரம் செய்தார்கள். இதன்மூலம் குகநாதனை இந்தத் துறையில்இருந்து முற்றாக ஓரம்கட்டிவிடலாம் என்று புலிகள் நினைத்தபோதிலும் அவர்களால் முடியவில்லை. கடன்பட்டாவது தொலைக்காட்சியை நடாத்தவேண்டும் என்ற விடாப்பிடியுடன் அவர் டான் தொலைக்காட்சியை தொடங்கினார். புலிகள் பல்வேறு வகைகளில் அவருக்கு நொருக்கடிகளைக் கொடுத்தபோதிலும் இடையிடையே தடைப்பட்டாலும் குகநாதன் ஏதோ ஒரு வழியில் வானொலி, தொலைக்காட்சியைத் தொடரவே செய்கின்றார்.
இந்தத் துறையில் அவர் பெற்ற பலவருட ஆனுபவமோ என்னவோ தெரியவில்லை, அண்மையில் தனது டான் தொலைக்காட்சியை இலங்கையிலிருந்து நேரடி ஒளிபரப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒளிபரப்பை ஆரம்பித்துள்ளார்.டான் தமிழ்ஒளி இன்று கொழும்பிலிருந்து நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பாவதால், இலங்கையில் ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சிகளின் செய்திகள் அதில் மறு ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.புலிகளின் ஊதுகுழல் செய்திகளையே பார்த்தும் கேட்டும் வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு சிறிலங்கா அரச தரப்பு செய்திகளும் எட்டியிருப்பது புலிகளை ஆத்திரமடையச் செய்திருக்கின்றது.டான் ஒலிபரப்பும் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியும் நடுநிலைமையுடன் செய்திகளை ஒலிபரப்பி வருகின்றது.
இவையெல்லாம் புலிகளுக்கு தலையிடியைக் கொடுத்து வருகின்றன.தமிழீழப் போர் என்று சொல்லிக்கொண்டு தமிழ் மக்களை பலிகொடுத்து வரும் புலிகளின் தொடர் தோல்விகள் புலம்பெயர் மண்ணில் அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்திவரும் நிலையில் உண்மைச் செய்திகள் மக்களைச் சென்றடைவது தமது இருப்பைக் கேள்விக்குறியாக்கிவிடும் என்று அச்சமடைந்திருக்கும் புலிகள் டான் மீது குறிவைத்திருப்பதாக தெரியவருகின்றது.டான் தொலைக்காட்சியையும் வானொலியையும் எப்படியாவது மூடிவிடுமாறு புலிகள் பாரிசில் உள்ள தமது பினாமிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக நம்பப்படுகின்றது.அதன் தொடக்கமாக தமிழ்அலை வானொலியை முதலில் மூடவைப்பதற்கான முயற்சியில் புலிகள் தற்போது குதித்திருக்கின்றனர்.குகநாதனோடு நீண்டகாலம் இருந்த சிலரை தூண்டிவிட்டு அவர்கள் மூலம் புதிய வானொலியை தொடங்கவும், அதன்மூலம் தமிழ்அலையில் உள்ள அறிவிப்பாளர்களை ஒட்டுமொத்தமாக இழுப்பதன் மூலம் தமிழ்அலையை மூடவைக்கவும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.
புலிகளின் பொட்டுஅம்மானுடன் நேரடித் தொடர்பில் உள்ள ரிஆர்ரி தமிழ்அலை முன்னாள் அறிவிப்பாளர் ஒருவரிடமே இதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாம். வானொலியை முடிக்கிவிட்டு பின்னர் தொலைக்காட்சியில் கைவைக்க புலிகள் திட்டமிட்டிருப்பதாக தெரியவருகின்றது.புலிகள் ரிஆர்ரியை பறித்தெடுத்தபோது அவரோடு ஒட்டுமொத்த அறிவிப்பாளர்களும் வெளியேறியதால் புலிகள் சிலநாட்கள் தடுமாறவேண்டி ஏற்பட்டாலும், அவர்களிடமிருந்த 'படை" பலத்தால் அவர்களால் நிலைக்கமுடிந்தது.இன்று அதே நிலை குகநாதனுக்கு ஏற்பட்டுள்ளது. அவர் அதனை சமாளிப்பாரா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
தேணி இணையம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment