Wednesday, May 28, 2008

நடிகை அசினை தேடும் போலீசார்

வேலைக்காரப் பெண் மாயமான புகார் தொடர்பாக விசாரணை நடத்த நடிகை அசினை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை தேனாம்பேட்டை கருணாநிதி காலனியை சேர்ந்தவர் நர்சம்மா என்கிற நகோமி. இவர் சென்னை போலீஸ்கமிஷனரிடம புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் தனது மகள் பியூலா(வயது 21) என்பவர் கடந்த 5 வருடங்களாக சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நடிகை அசின் வீட்டில் வேலை செய்து வருகிறார். வாரத்திற்கு மூன்றுமுறை என்னை பார்ப்பதற்காக வீட்டிற்கு வருவார். சில நாட்களாக வீட்டிற்கு வரவில்லை. அசின் வீட்டில் சென்று கேட்டபோது நடிகை அசினுடன் மும்பைக்கு சென்று இருப்பதாகவும் ஒருவாரத்தில் வந்து விடுவார் என்றும் கூறினார்கள். ஒருவாரம் கழித்து சென்று மீண்டும் கேட்டபோது சரியாக பதில் ஏதும் சொல்லவில்லை. என் மகளை மீட்டுத்தரவேண்டும் என்று கூறி இருந்தார். மயிலப்பூர் துணைக்கமிஷனர் மவுரியா மேற்பார்வையில் உதவிக் கமிஷனர் கண்ணபிரான், தேனாம் பேட்டை இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் இந்தப்புகார் தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். போலீசார் இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நடிகை அசின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வீட்டில யாரும் இல்லை. அனைவரும் மும்பைக்கு சென்று உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


இதையடுத்து போலீசார் நடிகை அசினுடன் தொலைபேசியில் பேசமுயன்று உள்ளனர். அவரது செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்த நடிகை அசினை தேடி வருகின்றனர். நடிகை அசின் மும்பை சென்று உள்ளாரா? வேறு எங்காவது சென்று உள்ளாரா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments: