அங்கே
ஒலிக்கிறது
சமாதான கீதம்
இங்கே நாளும்
ஒடுக்கப்படுகின்றது
ஜனநாயகத்தின்
உரிமைகள்
இப்பூமியில்
அப்பாவி சனங்களுக்குத்தான்
துப்பாக்கி சன்னங்களும்
தூக்கு மேடைகளும்
ஆதிக்க வெறியர்களின்
அராஜக செயலால்
ஆயிரம் உயிர்கள்
அன்றாடம் பணயம்
இனவாத இம்சை
இங்கிதமாய் தொடர்கிறது
சனங்களுக்குள் மாறாட்டம்
சமர்களில் தேரோட்டம்
அடிதடி ஆர்ப்பாட்டம்
ஆதாரமில்லாத
பயங்கரவாத பட்டம்
அதிகார பகிர்வில்
போதித்த போதனைகள் பல
சாதித்த சாதனைகள் சில
மதிக்கத்தக்க
மானுடத்தின்
மனித நேயம்
இப்படி மண்ணில்
மிதிக்கப்படுகின்றது
பொன்நிறைந்த பூமி
போரினால் மடியுது
எண்ணிறைந்த ஆசை
எம்மில் எட்டிக்காயாய் நாளும்
முட்டி மோதி கொள்ளுது
கண்ணிருந்தும் குருடாக
காதிருந்தும் செவிடாக
உடலிருந்தும் ஊனமாக
உயிர் வாழுது
உறக்கமில்லாத
ஜீவன்கள்!
கேபிரியேல் ஜோன்சன், லுணுகலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment