இலங்கையின் அரசியல் பொருளாதார துறைகளில் இந்தியாவின் அதிகரித்த
பங்களிப்பை இலங்கையிலுள்ள அனைத்துச் சமூகத்தினரும் விரும்பும்
அதேவேளை புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இந்தியா
பங்கெடுக்கக் கூடாது என்பதையே தென்னிலங்கையில் உள்ள பெரும்பான்மை சமூகத்தினர் விரும்புகின்றனர்.
இவ்வாறு மாற்றுக் கொள்கைளுக்கான நிலையம்
மேற்கொண்ட கருத்துக் கணிப்பு மூலம் புலனாகியுள்ளது என்று
தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் வடக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில்
கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில்
47.8வீதமான சிங்க மக்கள் புலிகளுடனான சமாதானப் பேச்சில் இந்தியா கலந்து கொள்வதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதேவேளை இதற்கு 62.9வீதமான இலங்கை தமிழர்களும்,
61.1வீதமான இந்தியத் தமிழர்களும்
70.6வீதமான முஸ்லிம்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேற்குலகு ஆதரவுடன் நோர்வே முன்னெடுத்த சமாதனா முயற்சிகளின் தோல்விக்குப் பின்னர் இந்தியாவின் பங்களிப்பு குறித்து இந்த மனோநிலை வெளியாகியுள்ளது.
இதேவேளை அபிவிருத்தி திட்டங்களில் புதுடில்லி பங்கு கொள்வதை
68.7வீதமான சிங்களவர்களும்,
56.7வீதமான இலங்கைத் தமிழர்களும்,
75.9வீதமான முஸ்லிம்களும் வரவேற்றுள்ளனர்.
வடக்குக் கிழக்கில் அமைதி திருப்பிய பின்னரே இந்தியா பொருளாதார உதவிகளை வழங்க வேண்டுமென இலங்கைத் தமிழர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாகவே அவர்கள் இந்தியா
பொருளாதாரத் திட்டங்களில் பங்கெடுப்பது குறித்து தயக்கம் கொண்டுள்ளனர்.
சிங்கள முஸ்லிம் சமூகத்தினர் இந்தியா இராணுவ பங்களிப்புக்களை வரவேற்றுள்ளதுடன் இலங்கை, இந்தியத் தமிழர்கள் அதனை எதிர்த்துள்ளனர்.
இந்தியாவின் இராணுவ பங்களிப்புக்கு 58.5வீதமான சிங்கவர்களும்,
61.5வீதமான முஸ்லிம்களும் ஆதரவளித்துள்ளனர்.
அதேவேளை 7.2வீதமான இலங்கைத் தமிழர்களும்,
4.9வீதமான இந்தியத் தமிழர்களுமே இதற்கு ஆதரவளித்துள்ளனர். என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment