Tuesday, May 13, 2008

கலைச்செல்வன் நளாயினி கைது

வெளிநாடு செல்வதற்காக வவுனியாவில் இருந்து கொழும்பு வந்த இளம் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாதகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். காங்கேசன்துறையிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா , செட்டிக்குளத்தில் வசித்து வந்த கலைச்செல்வன் நளாயினி (வயது 38) என்ற இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இக்கைது விடயம் தொடர்பாக அப்பெண்ணின் கணவரால் பிரதியமைச்சர் பெ.இராதகிருஷ்ணனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதென பிரதியமைச்சரின் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இருக்கும் உறவினர்களின் ஏற்பாட்டின் பிரகாரம் வெளி நாடு செல்வதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கென கடந்த மாதம் 5ஆம் திகதி காலை புறக்கோட்டை ஐந்துலாம்புச் சந்தியில் வவுனியா பஸ்லில் வந்து இறங்கிய நளாயினியை வழிமறித்த பொலிஸார் புறக்கோட்டைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கடந்த ஒரு மாதகாலமாகத் தடுத்து வைத்துள்ளனர் என அப்பெண்ணின் கணவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: