Monday, May 26, 2008
விடுதலைப்புலிகளுக்கு அமெரிக்கா யோசனை
தனி நாடு கோரிக்கையை புலிகள் கைவிட வேண்டும், என இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார். இது குறித்து, ராபர்ட் பிளேக் கூறியதாவது: கொழும்பு நகரில் தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வசிக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள தமிழர்களும், சிங்களர்களும் ஒற்றுமையாக தான் உள்ளனர். இலங்கையில் உள்ள தமிழர்களிடம் நான் பேசியதில், 95 சதவீதம் பேர் தனிநாடு கோரிக்கையை ஆதரிக்கவில்லை. ஒன்று பட்ட இலங்கையில் இருந்த படியே பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளவே இவர்கள் விரும்புகின்றனர். எனவே, தனிநாடு கோரிக்கையை புலி தலைவர் பிரபாகரன் கைவிட வேண்டும். இது பிரபாகரனுக்கு பயனுள்ளதாக அமையும். மக்கள் ஒற்றுமையாக வாழும் நிலையில் பயங்கரவாதத்துக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment