Thursday, May 15, 2008

மகேஸ்வரியின் இறுதிக்கிரியை இன்று மாலை கனத்தையில்


சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் ஆலோசகர் செல்வி மகேஸ்வரி வேலாயுதத்தின் இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை மாலை பொரளை கனத்தை மயானத்தில் நடைபெறவுள்ளது.
வடமராட்சி கரணவாய் பகுதியில் நேற்று முன்தினமிரவு செல்வி மகேஸ்வரி வேலாயுதம் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேற்றுக் காலை இவரது பூதவுடல் யாழ்ப்பாணத்திலிருந்து விமானம் மூலம் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டது.

இன்று காலை முதல் பிற்பகல் ஒரு மணி வரை பம்பலப்பிட்டி பார்க் வீதியிலுள்ள அலுவலகத்தில் இவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக் கிரியைகளுக்காக பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலைக்குக் கொண்டு செல்லப்படும்.

அங்கு மாலை 5.30 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெற்று மாலை 6 மணியளவில் பூதவூடல் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

No comments: