Thursday, May 15, 2008

புளொட் அமைப்பின் சர்வதேச ஒன்றியம் அஞ்சலி

பாரபட்சம் பார்க்காது தமிழ் மக்கள் அரசியல் பணி ஆற்றிய செல்வி மகேஸ்வரி வேலாயுதத்திற்கு புளொட் அமைப்பின் சர்வதேச ஒன்றியம் அஞ்சலி

மனித கௌரவத்திற்கான மன்றத்தின் செயலாளராக இருந்த செல்வி மகேஸ்வரி வேலாயுதம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் வீச்சம் பெற்ற காலங்களில் விடுதலைக்கு ஆதரவு கொடுத்து முன் உழைத்தவர். 1990களின் ஆரம்பத்தில் இலங்கை சிறைகளில் கைதிகளாக இருந்த நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களின் விடுதலைக்காக பாரபட்சமின்றி அயராது பணியாற்றியவர். 1990களின் நடுப்பகுதியில் இருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் தன்னை முழுமையாக இணைந்து புலிகளால் கொல்லப்படும் வரை பணியாற்றி வந்தவர். அந்திமகால சுகயீனத்தில் இருக்கும் தனது தாயாரான இளைப்பாறிய ஆசிரியை ஈஸ்வரி வேலாயுதம் அவர்களை மிக நீண்ட காலத்தின் பின் ஐரோப்பாவில் வசித்த தனது சகோதரர்களோடு சில தினங்கள் உடனிருந்து பராமரிக்க சென்ற அவரை கரவெட்டியில் உள்ள அவர்களது இல்லத்தில் வைத்து 13-05-2008 அன்று இரவு 8 மணியளவில் புலிகள் படுகொலை செய்து தமது பசியை தீர்த்துக் கொண்டனர். இவர் சமூக நலத்துறை அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அமைச்சு ஆலோசகரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினருமாவார். செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் தோழர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். -புளொட் சர்வதேச ஒன்றியம்

No comments: