பிரிட்டன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தடுப்புமுகாமில் உள்ள கருணா என்ற வினாயகமூர்த்தி முரளிதரன் நாட்டுக்கு வருகைதந்தால் சட்டமே பதிலளிக்கும் என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஹெகெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கருணா விடயத்தை பிரிட்டிஸ் பொலிஸாரும் அரசாங்கமும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவர் நாட்டுக்கு வருகைதந்தால் நாட்டின் சட்டதிட்டத்தின் பிரகாரம் பதிலளிக்கப்படும, அந்த சட்டம் எவ்வாறு இருக்கும் என்பது எனக்கு தெரியாது என்றும் அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
படையினரின் வேடத்தில் வந்தவர்களே மகேஸ்வரியின் மீது துப்பாக்கி சூடு- பிரிகேடியர் உதயநாணயக்கார தகவல்
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் ஆலோசகரும் மனித கௌரவத்துக்கான மன்றத்தின் செயலாளருமான சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதத்தின் அடையாள அட்டையை பரிசோதனை செய்து அடையாளம் கண்டுக்கொண்டதன் பின்னரே படையினர் வேடத்தில் வந்த ஆயுததாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
வடமராட்சி கரவெட்டிப் பகுதியிலுள்ள அவரது வீட்டுக்குள் பிரவேசித்த ஆயுததாரிகளே அவர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிசென்றுள்ளனர் துப்பாகிதாரிகளை கைதுசெய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் சொன்னார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் , நோய்வாய்ப்பட்டிருந்த தனது தாயை பார்ப்பதாக சென்றிருந்த வேளையிலேயே படையினரின் வேடத்தில் சென்ற துப்பாக்கிதாரிகள் அவரின் அடையாள அட்டையை சோதனைக்கு உட்படுத்தியதன் பின்னர் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர் . துப்பாக்கி பிரயோகத்தை அடுத்து பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸார் அப்பகுதியெங்கும் சுற்றிவளைப்பு தேடுதல்களை மேற்கொண்டதுடன் துப்பாக்கிதாரிகளை கைதுசெயவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment