Wednesday, May 14, 2008

பூனையை கண்டேன்

பிரிட்டனில் பல மாதங்களாக காணாமல் போன பூனை வெப் கேமரா மூலம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறதாம். இதில் என்ன விசேஷம் என்றால் இந்த பூனையை அமெரிக்க பெண்மணி ஒருவர் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார்.

பிரிட்டனில் உள்ள கான்வால் நகரத்தில் வசிக்கும் ஆபி எனும் பெண்மணி வளர்த்து வந்த பூனை கடந்த அக்டோபர் மாதம் காணாமல் போய் விட்டதாம். இந்த பூனையை கண்டுபிடித்து தருமாறு அவர் பல முறை வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

கடைசியில் அவரது கிராமத்தில் இருந்த வெப் கேமரா மூலம் பூனை நடமாட்டத்தை பார்க்க அமெரிக்க பெண்மணி இது பற்றி அவருக்கு தகவல் கொடுத்தார். இதனை யடுத்து அவர் பூனையை சுலபமாக தேடி கண்டுபிடித்து விட்டார்.

No comments: