Wednesday, May 28, 2008
ஒபாமாவுக்கு முஷரப் குடும்பத்தினர் தாராள நிதி உதவி
பாகிஸ்தான் அதிபர் முஷரப்பின் மகன் மற்றும் தம்பி ஆகியோர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அவர்கள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக்கட்சி சார்பில் போட்டியிடும் ஒபாமாவுக்கு தாராளமாக நிதி உதவி அளித்து உள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜான் மெக்கைன் போட்டியிடுகிறார். இப்போது ஜனாதிபதியாக இருக்கும் ஜார்ஜ் புஷ்சும் குடியரசுக்கட்சியை சேர்ந்தவர் ஆவார். அவர்தான் பாகிஸ்தான் அதிபர் முஷரப்புக்கு நெருக்கமானவர். முஷரப் அதிபராக இருந்த காலத்தில் பாகிஸ்தானுக்கு அதிக அளவு நிதிஉதவி செய்தவர். முஷரப்புக்கு நெருக்கடிகள் ஏற்பட்ட போது அவற்றை சமாளிக்கவும் புஷ் உதவி செய்தார். அவரது கட்சியை சேர்ந்த ஜான் மெக்கைன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு உதவி செய்யவில்லை. அவரை ஆதரிக்கவும் இல்லை. முஷரப்பின் தம்பி நவீத் முஷரப், மகன் பிலால் முஷரப், மருமகள் ஆகியோர் ஜான் மெக்கைனுக்கு நன்கொடை வழங்கவில்லை. அவர்கள் புஷ்சின் கொள்கைகளை எதிர்த்து பிரசாரம் செய்து வரும் ஜனநாயகக்கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்புள்ள ஒபாமாவுக்கு தாராளமாக நன்கொடைகளை வாரி வழங்கி இருக்கிறார்கள். 2004-ம்ஆண்டு தேர்தலில் ஜார்ஜ் புஷ் போட்டியிட்டபோது கூட அவருக்கு ஆதரவு தெரிவிக்க வில்லை.அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜான்கெரியை தான் ஆதரித்தார்கள். முஷரப் குடும்பத்தினர் ஒருகாலத்திலும் குடியரசு கட்சிக்கு நன்கொடை வழங்கியது கிடையாது என்று அந்த நாட்டு தேர்தல் கமிஷன் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment