Wednesday, May 28, 2008

எத்தியோப்பியாவின் முன்னாள் சர்வாதிகாரிக்கு மரண தண்டனை

எத்தியோப்பியாவின் முன்னாள் சர்வாதிகாரி மெங்கிஸ்து ஹெய்ல் மரியமுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மரண தண்டனை விதித்தது. 1977 முதல் எத்தியோப்பியாவை ஆட்சி செய்து வந்த மரியம், தன்னை எதிர்த்தவர்களை கொன்று குவித்தார். சிவப்புப் பயங்கரவாதம் என்று அழைக்கப்பட்ட இந்தப் படுகொலை தொடர்பாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. 1991-ம் ஆண்டில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதும், ஜிம்பாப்வேக்கு தப்பியோடினார். இந்நிலையில், கடந்த ஆண்டு அவருக்கு கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், இதைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் அவருக்கும் அவருக்கு உதவியாக இருந்த 11 உயர் அதிகாரிகளுக்கும் மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

No comments: