Monday, May 19, 2008

Password களை சேமித்து வைக்கவேண்டாம்

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரரிலும் ஃபைர்ஃபாக்ஸ்ஸிலும் உங்கள் கடவுச்சொல்லை (Password) சேமிக்கட்டுமா? என்று கேட்டால் வேண்டாம் என்று கொடுக்கவும்.

முக்கியமாக வலைஉலவு நிலையத்துக்கு (Browsing Centre) சென்று வலை உலா வரும்போது இது கூடவே கூடாது. உதாரணத்துக்கு http://www.nirsoft.net/utils/internet_explorer_password.html என்ற தளத்தில் கிடைக்கும் மிகச்சிறிய ஒரு உதவிக்கருவி உங்கள் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேமித்து வைத்திருக்கும் அனைத்து கடவுச் சொற்களையும் எடுத்துக் காட்டிவிடும்.

இது இப்படி என்றால் ஃபைர்ஃபாக்ஸ் இந்தக்கருவிகள் ஏதும் இல்லாமலேயே எடுத்துக் காட்டுகிறது. பின்வரும் வழியில் செல்லுங்கள், Tools>Options>Security>Show Passwords அங்கு சென்றதும் மீண்டும் Show passwords என்ற ஒரு இடத்தைச் சொடுக்கினால் அனைத்து கடவுச்சொற்களையும் காட்டுகிறது ஃபைர்ஃபாக்ஸ். யார் வேண்டுமானாலும் போய்ப் பார்க்கக் கூடியதாக உள்ளதால் நமக்கு அது மிகவும் ஆபத்தானதாக அமைந்துவிடும்.

No comments: