முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான அகோரச் ஷெல் தாக்குதல் காரணமாக இப்பகுதியிலிருந்து 600 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டம், மாந்தை கிழக்கு உதவி அரச அதிபர் பிரிவைச் சேர்ந்த கிராமங்களில் இருந்தே மேற்படி குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன என்று முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்தார்.
பாண்டியன் குளம் பகுதியில் ஷெல்கள் வீழ்வதனால் அங்கு இயங்கிவந்த உதவி அரச அதிபர் அலுவலகம் ஒட்டறுத்த குளத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment