Sunday, June 8, 2008

வடக்கு மக்களும் சுதந்திரத்தை அனுபவிக்க விரும்புகிறார்கள்

சர்வதேச அழுத்தங்களுக்காக போர் நிறுத்தப்படமாட்டாது! அரசியல் நோக்கங்களுக்காகவும் அது நடக்காது உறுதிபடச் சொல்கிறார் ஜனாதிபதி மஹிந்த

சர்வதேச நாடுகள் எந்தவிதமான அழுத்தங்களை விதித்தாலும் நாம் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தும் போர் நிறுத்தப்படமாட்டாது. அதேபோன்று திட்டமிட்ட சில அரசியல் நோக்கங்களை மனதில் வைத்தும் போர் நிறுத்தப்பட மாட்டாது.
இவ்வாறு உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற மைதானத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் பேசுகையிலேயே ஜனாதிபதி தமது நிலைப்பாட்டை வெளியிட்டார்.

போர் வீரரின் நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்த பின்னர் அவர் அங்கு பிர தம விருந்தினர் உரை நிகழ்த்தினார். ஜனா திபதி தமது பேச்சில் மேலும் கூறியவை வருமாறு:
ஆயுதங்களால் மட்டும் போரை மேற் கொள்ள முடியாது. படையினர் போரில் வெற்றி பெறுவதற்கு தலைமைத்துவம் மீது நம்பிக்கை இருப்பதும் அவசியம்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் இனிவரும் காலத்தில் படையினர் பின்னடைவைச் சந்திக்கப் போவதில்லை.

ஸ்ரீலங்காவின் வீரர்களை உலகம் கௌர விக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. உலகம் பயங்கரவாதத்தை இலங்கை மண் ணில் இருந்து ஒழிப்பதற்கு தங்கள் உயி ரைப் பணயம் வைத்துப் போராடும் எமது யுத்த வீரர்களின் தியாகத்தை அகில உல கமும் நினைவு கூரும் காலம் விரைவில் வரும்.படைவீரர்களின் மனோநிலையை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் பெரும் சேவைகளைச் செய்துவருகிறது. பயங்கர வாதிகளுக்கு எதிரான இராணுவநடவடிக் கையை நிறுத்தி விடுமாறு கடுமையான சர்வதேச அழுத்தம் பிரயோகிக்கப்படும் இந்த வேளையில் அரசாங்கம் படையி னரை கௌரவிப்பதை வரலாறு எடுத்துக் கூறும்.
சர்வதேச ஆதிக்கம் காரணமாகவும் சமா தான ஆர்வலர்களின் எதிர்ப்புக்காரண மாகவும் முன்னர் பதவியில் இருந்த சில அரசாங்கங்கள் இராணுவ நடவடிக் கையை கைவிட வேண்டிய நிர்ப்பந்தங்கள் சந் தர்ப்பங்கள் ஏற்பட்டன.

எவ்வாறாயினும் இந்த அராசாங்கம் படையினருக்கு எதுவித பின்னடைவும் ஏற்பட அனுமதியாது. பொதுமக்களை, நாட்டில் அமைதியை பேணுமாறு கோரி வரும் இந்தவேளையில் அரசாங்கம், அரசி யல் நோக்கங்களுக்காக இராணுவ நடவ டிக்கையை நிறுத்திவிடமாட்டாது.தற்போதைய நெருக்கடியான காலகட் டத்தில் முப்படையினருக்கும் பொலிஸா ருக்கும் பொதுமக்களின் ஆதரவு அசியம். அரசியல் கட்சிகள் இந்த விடயத்தில் பூரண ஆதரவைத் தரவேண்டும். அரசியல் வாதி கள் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு களுக்குப் பதில் அளித்துவிட முடியும்.

ஆனால் படைவீரர்களால் பதில் கூற முடியாது. போராடும் படைவீரர்களால் அவர் களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்க முடியாது. இதனால் படை யினரின் மனோநிலை மிகவும் பாதிக்கப் படும். ஆயுதங்களினால் மாத்திரம் பயங்கர வாதத்தை ஒழித்துவிட முடியாது.எனவே படையினரின் மனோநிலையை பல்வேறு வழிகளில் ஊக்குவிப்பதற்கு அர சாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் இராணுவ நடவடிக்கைகளை தடுக்கும் யுக்தியுடன் பயங்கர வாதிகள் மிருகத்தனமான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.

வடக்கு மக்களும் சுதந்திரத்தை அனுபவிக்க விரும்புகிறார்கள்

கிழக்கு மாகாண மக்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை தாங்களும் அனுபவிக்க வேண்டும் என்று வடபகுதி மக்கள் விருமபுகிறார்கள். மக்களின் விருப்பத்தை நிறை வேற்றுவது தனது தலையாய கடமையா கும் என்று அரசாங்கம் கருதுகிறது.

யுத்த வீரர்களுக்கு மக்கள் செய்யும் மரியாதை

இந்த நிலையில் தென்னிலங்கை மக்கள் மிக அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். யுத்த வீரர்களுக்கு மக்கள் செய்யும் மரியாதை இதுவே!
திரைநீக்கம் செய்யப்பட்டுள்ள இந்த நிணைவுச் சின்னம் நாட்டில் ஜனநாயகத் தையும் மக்கள் உரிமைகளையும் பாதுகாப் பதற்கு படையினர் ஆற்றிவரும் சேவையை என்றும் நினைவுறுத்தும்என்று கூறினார் ஜனாதிபதி.

"ரணவிரு"சேவை அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெனான்டோ பிரதமமந்திரி மற்றும் அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments: