Sunday, June 8, 2008

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா காஷ்மீர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்

காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள தெற்காசிய நிதி யம் ஒழுங்கு செய்திருந்த சார்க் கலாசார நிகழ்ச் சியில் கலந்து கொள் ளும் பொருட்டு இந்தியா சென்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உரிய ஆவணங்களைச் சமர்ப் பிக்கத் தவறியதால் விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டார்.

தாம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி என்று சந்திரிகா எடுத்துக் கூறியும் விமானநிலைய அதிகாரிகள் அதனைப் பொருட்படுத்தவில்லை என்று கூறப்பட்டது.
"சார்க் விஸா ஸ்டிக்கர்" மூலம் இந்தியா சென்ற சந்திரிகா அதற்குரிய விதிமுறை களின் பிரகாரம் கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான இந்திய மத்தி உள்துறை அமைச்சகத்தின் முன் அனுமதியைப் பெற்றிருக்கவில்லையாம். இதனாலேயே அவர் விமான நிலைய அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்தார் என்று கூறப்பட்டது.

எனினும் பின்னர் இலங்கை மற்றும் இந்திய தூதரகங்களுக்கிடையிலான கருத்துப் பரிமாற்றங்களின் பின்னர் சந்திரிகா தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

No comments: