Monday, June 9, 2008

தனித்தமிழ் ஈழம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராட முடிவு-விடுதலைப் புலிகள்

தனித் தமிழ் ஈழம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராடப் போவதாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தளபதி வேலவன் தெரிவித்துள்ளார்.

அண்மையில், விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், தனித்தமிழ் ஈழத்தைத் தவிர, வேறு எந்த சமரச ஏற்பாட்டையும் தமது அமைப்பு ஏற்காது என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இலங்கையில், புலிகள் அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்த இயக்கத்தின் தளபதி வேலவன், தமிழ் ஈழம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராடப் போவதாக தெரிவித்தார். இதனிடையே சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இலங்கை முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, இலங்கையில் அமைதி ஏற்படுவதற்கு அரசியல் ரீதியான தீர்வு தேவை என்று கூறினார். மேலும், அதிகாரங்களை அனைத்து தரப்பினருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், ராஜபக்சேவின் அரசு இதை செயல்படுத்த மறுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இலங்கையில் அமைதியான சூழ்நிலை ஏற்படுவதற்கு, தமது கட்சி பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்போவதாக ரனில் தெரிவித்தார்.

No comments: