ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ திருமண விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று சனிக்கிழமை இராமேஸ்வரம் சென்றார்.
இராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் உள்ள அகதிகள் முகாமுக்கு சென்று அகதிகளிடம் பேசி அவர்களின் நலன் குறித்து விசாரித்தார். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;
"" இலங்கை அகதிகள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகள் உயர்கல்வி கற்க உரிய வசதிகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.
ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகளிலிருந்து அகதிகள் புனர்வாழ்வுக்காக அனுப்பப்படும் நிதி முறையாகக் கையாளப்படுவதில்லை. அகதிளாக வந்திருக்கும் இவர்கள் இங்கு அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள்' என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment