ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகரான கே.பத்மநாபனை தேடி சி.பி.ஐ. படை ஜெர்மனி சென்றுள்ளது. ஆனால் கடந்த ஜனவரி 9ம் டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் தாய்லாந்தில் பத்மநாபனை சந்தித்துள்ளனர். இது குறித்து அவர்களிடம் சிபிஐ விசாரிக்க வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கோரியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக கே.பத்மநாபனை தேடி சி.பி.ஐ. படை ஜெர்மனிக்கு சென்றுள்ளது.
ஆனால் கடந்த ஜனவரி 9ம் தேதி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஜி.கே. மணி, விடுதலை சிறுத்தைகள் லைவர் திருமாவளவன் ஆகியோர் மலேசியா சென்றனர். அங்கிருந்து தாய்லாந்து சென்று பத்மநாபனை சந்தித்துள்ளனர்.
விமான நிலையத்தில் விடுதலைப் புலிகள் அவர்களை வரவேற்றும் இருக்கிறார்கள். இதற்கான புகைப்பட ஆதாரம் என்னிடம் இருக்கிறது. எனவே இதுகுறித்து ராமதாசிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
இந்திய பங்குச் சந்தையில் முதலீட்டில் பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் மூலம் ஏராளமான பணத்தை தீவிரவாத அமைப்புகள் புழக்கத்தில் விட்டுள்ளன. எனவே பார்ட்டிசிபேட்டரி நோட்ஸை குறிப்புகளை ஒழிக்க வேண்டும் என்று பாதுகாப்பு துறையும், செபி அமைப்பும் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளன.
இருந்தாலும் ப.சிதம்பரம் அதை ஒழிக்க மறுக்கிறார். இதுபற்றி பல்வேறு கேள்விகளை ஜெயலலிதா எழுப்பியிருக்கிறார். அதற்கு பதில் கூற முடியாமல் தனது அமைச்சகம் மூலம் அவர் பதில் சொல்ல வைத்துள்ளார் சிதம்பரம் என்றார் சுவாமி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment