Saturday, June 7, 2008

இனக் கலவரத்தைத் தூண்டும் புலிகளின் முயற்சி

மொறட்டுவ, கட்டுப்பெத்தப் பகுதியில் நேற்று இடம்பெற்ற கிளைமோர்த் தாக்கு தலை வன்மையாகக் கண்டித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. தமிழ் மக்களுக்கு எதிராக இனக்கலவரத்தைத் தூண்டிவிடும் விடுதலைப் புலிகளின் முயற்சி இது என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களைப் பொறுமையாக இருக்கும்படியும், இன வன்முறை மற்றும் வெறுப் புணர்வைத் தூண்டும் முயற்சிகளுக்குப் பலியாக வேண்டாமெனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்றைய தாக்குதல் சம்பவம் தொடர் பாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள் ளவை வருமாறு:

கட்டுப்பெத்தவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு, விடுதலைப் புலிகளின் கொடூரத் தன்மையையும் மனித உயிருக்கு மதிப்பு வழங்காததையும் வெளிப்படுத்துகின்றன.
இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட அனை வருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்க ளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிழக்கை இழந்தமை மற்றும் வடக்கில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் ஆகியவற் றால் விடுதலைப் புலிகள் பீதியடைந்திருப்பதை இது புலப்படுத்துகிறது.
கடந்த சில வாரங்களில் விழிப்புணர்வு மிக்க பொதுமக்களால் வாகனங்களிலும் பொது இடங்களிலும் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன.

மறைத்து வைக்கப்பட்டுள்ள குண்டுகளைக் கண்டுபிடிப்பது, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நபர்களைக் கைது செய்வது ஆகியவற்றில் பொதுமக்களின் பங்களிப்புப் பாராட்டப்படத்தக்கது.

விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாகப் பொதுமக்களை இலக்குவைப்பதை சகல நாகரிக சமூகங்களும் கண்டிக்க வேண்டும்.

இப்படி ஜனாதிபதி தெரிவித்தார்.

No comments: