"கட்டுப்பெத்த பகுதியிலும் கண்டி பொல்கொல்ல பகுதியிலும் பயணிகள் பஸ்கள் மீது நேற்று புலிகளால் நடத்தப் பட்ட கிளைமோர்த் தாக்குதலை நாம் கடுமையாகக் கண்டிக்கின்றோம். அப்பா விப் பொதுமக்கள் மீதான இத்தகைய படுகொலைகளினால் தமிழ் மக்களுக்கு எத்தகைய விடுதலையையும் பெற்றுத்தர முடியாது. மாறாக தமிழ்சிங்கள மக்களி டையே இனப்பகையையே ஏற்படுத்தும்.''
இவ்வாறு ஈ.பி.டி.பி. கண்டனம் தெரி வித்திருக்கிறது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப் பவை வருமாறு:
அப்பாவி மக்கள் 21 பேர் படுகொலை யாகவும் 40இற்கு அதிகமானவர்கள் காயம டையவும் காரணமாக இருந்த இந்தத் தாக்குதலையும், கடந்த நான்காம் திகதி தெஹிவளையில் ரயில் மீதான தாக்குத லையும் தமிழ் மக்கள் மட்டுமல்ல இந்த நாட்டின் அனைத்து மக்களும் வெறுக்கின்றனர்.
இச்சம்பவங்கள் எதுவும் படையினரையோ அல்லது யுத்தத்தில் தொடர்புபட்ட எவரை யும் இலக்கு வைத்து நடத்தப்படவில்லை. அப்பட்டமாக அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டவையாகும்.
புலிகள் தம்மீதான நெருக்கடிகளை, இழப்புகளை திசை திருப்புவதற்காகவே இயலாமையின் வெளிப்பாடாக இத்த கைய தாக்குதல்களைத் தொடுக்கின்றனர். இதையிட்டு தமிழர்களும் சரி வேறு எவரும் மகிழ்ச்சிகொள்ள மாட்டார்கள். மாறாகப் புலிப்பயங்கரவாதத்தின் கோர மான முகத்தையே மேற்படி சம்பவங்கள் வெளிக்காட்டியிருக்கின்றன.
அப்பாவிப் பொதுமக்கள் மீது புலிகள் நடத்தும் இத்தகைய படுகொலைகளை அனைவரும் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். பயங்கரவாதத்துடன் வாழ முடி யாது. பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட அனைத்து மக்களும் முன்வர வேண்டும். கொலைகளுக்கூடாக எத்த கைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடி யாதுஎன்றுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment