Thursday, June 12, 2008

இது எப்படியிருக்கு?

கொழும்பு புறக்கோட்டையிலுள்ள ஒரு சைவ உணவகத்தில் சாப்பாட்டுத் தட்டில் போடப்படும் “லஞ்ச் சீட்” டுக்கும் இரண்டு ரூபா மேலதிகமாக அறவிடப்படுகிறது. இது எவ்வகையிலும் நியாயமில்லை எனப் பொதுமக்கள் கூறுகின்றனர். தண்ணீர் செலவைக் குறைக்கும் நோக்குடன் சாப்பாட்டுத் தட்டுக்களைக் கழுவாமல் மீண்டும் பரிமாற இந்த “லஞ்ச் சீட்” முறை துணை செய்கிறது. இருப்பினும் இந்த சைவக் கடையில் இது ஒரு மேலதிக கட்டணமாகவே அறவிடப்படுகிறது. மலிவாகச் சாப்பிட தோசைத் கடைக்குச் சென்றால் இப்படி கொள்ளையா? என்றும் மக்கள் கேட்கின்றனர். இதே கடையில் தோசை சாப்பிட்டு விட்டு மூன்று இடியப்பங்கள் கேட்டால் ஐந்து எடுக்குமாறு வெயிட்டர்கள் வலியுறுத்துகின்றனர். ஐந்து இடியப்பத்துக்கே கட்டணமும் அறவிடப்படுறது. இது மற்றும் ஒரு பகல் கொள்ளையா? என்றும் பாவனையாளர்கள் கேட்கின்றனர். பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை இந்த விடயத்தில் கவனம் எடுத்து அப்பாவி பொதுமக்களைப் பாதுகாக்க வேன்டுமென்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

1 comment:

Anonymous said...

நாட்டில் வறுமை அதிகரிக்க, அதிகரிக்க இவ்வாறான விடயங்கள் நடப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ந்டவடிக்கை எடுப்பதை விடுத்து இலங்கை மக்களின் வறுமையைப் போக்க முதலில் அரசு ஏதாவது செய்யட்டும். போர் ஒருபக்கம் உச்சகட்டமான விலைவாசி மறுபக்கம் இங்கு வாழ்வதென்பதே பெரும் கேள்விக் குறியாகியுள்ளது.

- ஒல்லாந்தன் -