Sunday, June 15, 2008

மனநோயாளிகள் யார்?

நீதி மன்றம் கொண்டு சென்ற கைதிகளை சுட்ட மனநோயாளிகள் யார்? உண்மைகளை
மறைக்க ஊடகங்கள் வழிகொடுக்காது.
குடாநாட்டில் அரசின் பயங்கரவாதசட்டத்தின் கீழ் அச்சுறுத்தல் செய்யப் படும் மக்கள் தமது உயிர் பாதுகாப்பிற்கு மனித உரிமைகள் ஆணைக் குழுவில் சரணடைந்தர்கள். அவர்கள் புலிகளின் அச்சால்தான் சரணடைந்தார்கள் என்று அரச ஊடகங்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் புலிகள் ஒரு எச்சரிக்கையின் பின்தான் குற்றவாழியை சுட்டு வந்தார்கள் என்பதை குடாநாட்டு மக்கள் மட்டுமல்ல மற்றைய ஆயுதக் குழுக்களும் அறிவார்கள். இந்த நிலையில் புலிகளை பயங்கரவாதிகள் என்று அரசுதான் குறிப்பிட்டு, பொதுமக்களை கொலை செய்து வருகின்றது என்பதை பகிரங்கமாக மனித உரிமை நிருவனங்கள் ஆதாரபூர்வமாக சுட்டிக் காட்டி வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு பல காரணங்கள் உண்டு. இருந்தாலும் தமிழர்கள் புலிகளை பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கும் நிலையில் புலிகள் இல்லை என்பதை சர்வதேசம் அறியும். இலங்கை அரசின் அரசியல் இலாபத்திற்காக தமிழ் மக்களை சிதறடித்து அரசியல் இலாபத்தையும் மற்றும் இந்தியாவின் குள்ளநரித்திட்டத்தையும் உள்வாங்கி வரும் தமிழ் தலைவர்கள் அல்லது அரசியல் இலாபத்தை மட்டும் எண்ணி இருப்பவர்கள் தான் புலிகள் மீதுள்ள சிறுகுறைகளை தமது பிரச்சாரத்திற்காக பகிரங்கப்படுத்தி அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து வருகிறார்கள் என்பது ஒரு புறத்தில். இதனால் இன்று இலங்கையில் ஆயுதம் வைத்திருக்கும் அத்தனை பேரும் மனநோயாளிகளே என்பதை மக்கள் அறிவார்கள் ஊடகங்கள் தமது சுகத்திற்கு மேலோட்டமான செய்திகளை திரிப்பதால் மக்கள் திசைதிரும்பமாட்டார்கள் காரணம் கடந்த காலத்தில் ஏழாலையில் இராணுவத்தினரை அப்பகுதி மக்கள் மறித்து கல்லு எறிந்தார்கள் என்பதை பகிரங்கமாக ஊடகங்கள் அறிவித்தது. அப்படியானால் இராணுவம் குடாநாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்ற நோக்கம்; மக்கள் மத்தியில் இன்னும் உண்டு என்பதை நாம் ஒருபொழுதும்; மறக்கக் கூடாது. இதுதான் தமிழர்களின் விருப்பம், இன்று டக்கிஸ் போன்ற அரச கட்சிகளின் குஞ்சங்கள் தெருக்களில் தொங்குவதால் யாழ் குடாநாட்டு மக்கள் குஞ்சங்கள் ஆதரவு கொடுக்கும் என்று நம்பி இறங்கவில்லை. இன்றைய பிரச்சனை ஒரளவிற்கு குறைந்து மக்கள் தாம் கொஞ்சம் மூச்சு விட எண்ணுகின்றார்கள் என்பதை டக்கிஸ் போன்ற அரச கட்சிகளின் குஞ்சங்கள் புரிந்து கொள்ளவேண்டும். மற்றும் சிறைச்சாலை வாகனத்தை வழிமறித்து மேற் கொண்ட தாக்குதலில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரியவரும் செய்தியில், ஒருவர் படுகாயமடைந்தார் என்றும் மற்றிருவர் இறந்துவிட்டார் எனவும் தெரியவந்துள்ளது. இது எங்கு நடந்தது என்ற விபரங்கள் தேவை யில்லை இதை நடத்தியவர்கள் இராணுவ ஆதரவாளர்கள் என்பதை மக்கள் அறிவார்கள். காரணம் புலிகளால் வாகனம் மறித்து சுடவேண்டிய காரணம் இல்லை. மற்றது சுட்டுவிட்டு இராணுவத்தின் கண்முன்னே தப்பிச் செல்லும் அளவிற்கும் புலிகள் இல்லை. இன்று குடாநாட்டில் நடக்கும் அத்தனை கொலைக்கும் டக்கிஸ் போன்ற அரச கட்சிகளின் குஞ்சங்கள் தான் காரணம். இவர்கள் தற்பொழுது பல தில்லு முள்ளுக்களும் நடத்தி வருகின்றார்கள். காரணம் மற்றைய குழுக்களுடன் சேர்ந்து இயங்கும் அங்கிகாரத்தை டக்கிஸ் கிழக்கே இழந்துவிட்டார் என்பதால் தற்பொழுது தனக்கு வடக்கில் ஒரு அடையாளம் தேவை என்பதற் காகவே இராணுவத்தின் குஞ்சாக மாறிவிட்டார் என்பது உண்மை இதனை இலங்கை ஊடகங்கள் எழுதும் தன்மையில் இல்லை என்பது தான் உண்மையான நிலை. சிறைச்சாலை திகில் சம்பவம் நேற்றுக் காலை 9 மணியளவில் சுன்னாகம் புன்னாலைக் கட்டுவன் வீதியில், ரயில் நிலையத்துக்குச் சமீபமாக அரங்கேறியுள்ளது. சிறைச்சாலையில் இருந்து மல்லாகம், பருத்தித்துறை நீதிமன்றங்களின் வழக்குகளில் ஆஜர் செய்யப் படுவதற்காக சுமார் 30 முதல் 40 கைதிகளுடன் சிறைச்சாலை வாகனம் நேற்றுக் காலை புறப்பட்டது. மல்லாகம் நீதிமன்றத்துக்குரிய கைதிகளை அந்த நீதிமன்றத்தில் இறக்கிவிட்டு பருத்தித்துறை நீதிமன்றம் நோக்கி சிறைச்சாலை வாகனம் சென்று கொண்டிருந்தது. சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைக் கடந்து, சுன்னாகம் புன்னாலைக் கட்டுவன் வீதியில் வாகனம் சென்று கொண்டிருந்த போது, செக்கர் கந்தசாமி ஒழுங்கையில் இருந்து புறப்பட்ட "ஹைஏஸ்' வாகனம் ஒன்று சிறைச்சாலை வாகனத்தை வழிமறித்தது. அப்போது அங்கு மோட்டார் சைக்களில் வந்த ஆயுததாரிகள் சிறைச் சாலை வாகனத்தில் ஏறிஇருவரை நோக்கிச்சுட்டனர். இருவரும் வாகனத்துக்குள்ளேயே பிணமானார்கள். இந்த வாகனத்தில் இருந்த 18 சந்தேகநபர்களில் ஒருவர் காயமடைந்தார். ஆயுததாரிகள் வாகனத்தைக் கைவிட்டுத் தப்பிச்சென்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்த சுன்னாகம் பொலிஸார் கடத்தப்பட்ட ஹைஏஸ் வானில் இருந்து, கை, கால்கள் கட்டப் பட்ட நிலையில் அதன் சாரதியை மீட்டனர். சிவராசா லெப்பின்ராஜ் (வயது 26 இராசகிராமம், கரவெட்டி), தங்கராசா சுலோஜன் (வயது 26 இராஜகிராமம், கரவெட்டி) என்ற இரு கைதிகளுமே சுட்டுக் கொல்லப் பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். ஒருவர் சந்தேக நபர்; மற்றவர் சரண் அடைந்தவர் பருத்தித்துறையைச் சேர்ந்த குருக்கள் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் சந்தேகநபர் சுலோஜன் ஆவார். மற்றவர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக சரண் அடைந்து நீதிமன்றப் பாதுகாப்பின் பேரில் சிறைச்சாலையில் வைக்கப் பட்டிருந்தவராவார். மற்றொரு வழக்கின் சந்தேக நபரான ஜெரோமியஸ் ரகுபரன் (வயது24, கரணவாய், கரவெட்டி) என்பவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆயுததாரிகள் மேற்படி "ஹைஏஸ்' வானையாழ். பிறவுண் வீதியில் இருந்து கடத்தி வந்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது.. ஒரு வீட்டுக்காரர் ஆலயத்துக்குச் செல்வதற்காக வாடைகைக்கு அமர்த்திய இந்த வான், அவர்கள் வீட்டுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த வேளை கடத்தப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வான் நீதிமன்ற உத்தரவின் பேரில் சுன்னாகம் பொலிஸ்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மல்லாகம் நீதிவான் திருமதி. சறோஜினி இளங்கோவன் சம்பவ இடத்தில் விசாரணைகளை நடத்தினார்.

No comments: