Sunday, June 15, 2008

ஜனாதிபதி மேலேவைப்பது என்றால் புலிகள் கீழே வைக்கவேண்டுமென்று கோரிக்கையில் அரசியல் நகர்வு

சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டுமென்றால் புலிகள் அதற்கு முன்னர் தமது ஆயுதங்களை கீழே வைக்கவேண்டுமென்று அப்பொழுது ராஜபக்ஷ தனது சமாதானப் பேச்சுக்களை மீள ஆரம்பித்து மேலே பேச்சுக்கு இடமிளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி அங்கு வெளிவரும் டைம்ஸ் தினசரிக்கு வழங்கிய விசேட பேட்டி: பயங்கர வாதத்தை அணுகும் விடயத்தில் இருவேறுபட்ட நிலைப்பாட்டினை கொண்டிருக்க முடியாது. நல்ல பயங்கரவாதிகள், கெட்டபயங்கரவாதிகள் என்று இருவகையினர் இருக்கின்றனர் என்ற விடயத்திலும் எனக்கு உடன்பாடு இல்லை. எல்லோருமே பயங்கரவாதிகள்தான். புலிகளுக்காக லண்டனில் இருந்து மட்டுமல்லாமல் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பணம் வசூலிக்கப்படுகிறது. இதுவொரு தொண்டுப்பணிகளுக்கான பங்களிப்பல்ல. வலுக்கட்டாயமாகவே வசூலிக்கப்படும் அப்பணம் துப்பாக்கி கள் வாங்குவதற்காக அனுப்பப்படுகிறது. புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரை சூழவுள்ளவர்களும் இரத்தத்தாகம் கொண்ட கொலையாளிகள். அவர்களை அணுகுவது மிகவும் கஷ்டமான விடயமாகும். விடுதலைப் புலிகள் பலவீனமடைகின்ற போதெல்லாம் போர் நிறுத்தம் ஒன்றிற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச?கத்தை அவர்கள் கோருவது வழமையான நிகழ்வாகிவிட்டது. இக்காலப் பகுதியில் பயிற்சிகளை மேற்கொண்டு, ஆயுதங்களை பெற்று மீண்டும் போருக்கு தயாராவதே அவர்களின் திட்டம். ஆனால், இம்முறை சமாதான பேச்சுக்களை மேற்கொள்ள அவர்கள் விரும்பினால் அதற்கு முன்னர் கட்டாயமாக ஆயுதங்களை களையவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் பேச்சுவார்த்தை ஒன்றிற்கு செல்ல முடியாது என்றர்.

No comments: