Saturday, June 21, 2008

மீண்டும் இலங்கைக்கு இந்திய இராணுவம்?

இலங்கைக்குள் பாதுகாப்பு என்ற பெயரில் இந்திய இராணுவத்தை சார்க் மாகாநாட்டிற்கு இறக்கும் நோக்கத்தில் கொழும்புக்கு நேற்று முற்பகல் முன்னறிவிக்கப்படாத அவசர பயணத்தினை மேற்கொண்டு வருகை தந்த இந்திய மத்திய அரசின் மூவர் அடங்கிய உயர்மட்டக் குழு, முக்கிய பேச்சுவார்த்தை நடத்திவிட்டு இன்று மீண்டும் இந்தியா திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சகச் செயலாளர் சிவசங்கர் மேனன், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிறி விஜய சிங் ஆகிய மூவர் அடங்கிய உயர்மட்டக் குழுவே கொழும்பு வந்துள்ளது. சிவசங்கர் மேனன் தவிர ஏனைய இருவரும் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னறிவிக்கப்படாத பயணமாக கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை முற்பகல் 11:45 மணியளவில் சிறப்பு வானூர்தியில் வந்திறங்கிய இவர்கள் கொழும்பில் அரசின் முக்கியபிரதிநிதிகளைச் சந்தித்துபேச்சு நடத்தியுள்ளனர். குறிப்பாக பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய்வதே இவர்களின் பயணத்தின் பிரதான நோக்கம் என்று அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சார்க் உச்சி மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வருகை தரவுள்ளதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேச்சு நடத்துவதற்காகவே இவர்கள் வருகை தந்தனர் என்று அரச தரப்பு தகவல்களில் கூறப்படுகின்றது. எனினும் இவர்களின் பயணம் குறித்த அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அறிவித்தல்கள் உடனடியாக வெளிவரவில்லை. சிறிலங்காவிற்கான சில மணிநேரப் பயணத்தினை முடித்துக்கொண்டு இக்குழுவினர் இன்று இந்தியா திரும்பவுள்ளனர். எனினும் சிங் வருகை யொட்டி ஒரு சரியான பாதுகாப்பு நடவடிக்கை ஏற்படுத்த இந்த இராணுவம் மறைமுகமாக இல்லாது நேரடியாகவே இலங்கை வரும் சந்தர்பம் ஏற்பட்டுள்ளது.

No comments: