Sunday, June 8, 2008

பால்ராஜை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்தவர் ஜயலத் ஜெயவர்த்தன

அண்மையில் காலமான விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவுத் தலைவர் பால்ராஜை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கியவர் ஜயலத் ஜெயவர்த்தன எம்.பி.யெனக் குற்றம் சாட்டிய அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார, ஜயலத் எம்.பி.க்கு புலிகளுடன் சிநேகபூர்வமான உறவுகள் இருப்பதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான சட்ட மூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

""விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு பொறுப்பாளரான தயா மாஸ்டர் சிகிச்சை பெறுவதற்காக அப்பலோ மருத்துவமனைக்கு வந்த போது அவரை சென்று பார்வையிட்டவர் இந்த ஜயலத் எம்.பி. இவர் புலிகளின் பகுதிகளுக்கு சிலைகளையும் கொண்டு செல்வார். புலிகளால் பாதிக்கப்படும் சிங்கள மக்களுக்கு சைரன் ஒலி எழுப்பும் கருவிகளையும் வழங்குவார்.

தனது தாயாரும் சகோதரியும் நடத்தும் கம்பனிக்கு யாழ்ப்பாணத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பியவர் யார்? பேராசிரியர் பட்டம் என்பது பல பரீட்சைகளை எழுதிப் பெறப்படும் பட்டம். ஆனால், அது ஜயலத் ஜெயவர்த்தனவுக்கு எப்படிக் கிடைத்தது? டாக்டராக தன்னைக் கூறிக் கொள்பவர் இப்போது பைத்தியமாக மாறி வருகிறார்' என்றார்.

ஜயலத் ஜெயவர்த்தன தொடர்பாக ஹேமகுமார நாணயக்கார கூறிய பல கருத்துகளை ஹன்சாட்டிலிருந்து நீக்குவதாக சபாநாயகர் அறிவித்ததனால் பல விடயங்கள் ஹன்சாட்டிலிருந்து நீக்கப்பட்டன.

No comments: