கிளிநொச்சியில் இருந்து அண்மையில் தமிழகம் வந்து சேர்ந்தாக நம்பப்படும் புலிகளின் உயர்மட்ட மற்றும் நீண்ட நாள் உறுப்பினருமான 46 வயதுடைய தம்பியண்ணா இன்றையதினம் (2008-07-30) சென்னையில் வைத்து கியு பிரிவின் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னையில் எங்கு வைத்து இவர் கைதுசெய்யப்பட்டார் ,எப்படி இவர்களுக்கு தகவல் கிடைத்தது என்பது குறித்து இலங்கையில் இருந்து வெளிவரும் ஆங்கில ஏட்டின் நிருபர் கேட்டமைக்கு கியு பிரிவு அதிகாரிகள் அந்த விபரங்களை கூறுவதற்கு மறுத்துள்ளனர்.
புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தளபாடங்களை கண்காணிப்பதற்கும், கொள்வனவிற்கும் தம்பியண்ணா பொறுப்பாக இருந்து வந்தாக கூறப்படுகிறது. புலிகளுக்காக ஆயுதங்களை கொள்வனவு செய்துவந்த கே.பி என்பவர் சர்வதேச (Interpol) பொலிசாரினால் தீவிர கண்காணிப்பிற்கு உள்படுத்தப்பட்ட பின்னர் தம்பியண்ணா அந்த பொறுப்பினை கவனித்து வந்தாக ஆங்கில ஏடு ஒன்று தெரிவித்துள்ளது. புலிகள் படையினரின் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பதினால் தம்பியண்ணா முதலில் கிளிநொச்சியில் இருந்து தமிழகம் வந்துசேர்ந்தாகவும், ஏனைய உயர்மட்ட தலைவர்களும் கிளிநொச்சியில் இருந்து தமிழகத்திற்கு பாதுகாப்பு தேடிவரக்கூடும் எனவும் ,இதனால் தமிழக கடற்கரையோரங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தனது பெயர் கூற விரும்பாத தமிழக காங்கிரஸ் முக்கியஸ்துவர் ஒருவர் எமக்கு தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment