Saturday, July 12, 2008

புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளரின் புதிய கண்டுபிடிப்பு!!!

ஈழ விடுதலைப் போராட்டம் பலவீனமடைவது இந்தியாவின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்

புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன்

தமிழ் மக்களின் சட்டபூர்வ உணர்வுகளையும் விடுதலைப் போராட்டத்தையும் இந்திய அரசாங்கம் அங்கீகரிக்கும் என்று நம்புகின்றோம். ஈழவிடுதலைப் போரா ட்டம் பலவீனமடைவது இந்தியாவின் நலனுக்கு நிச்சயமாக பாதிப்பினை ஏற்படுத்தும்.இந்தியாவுக்கு எதிரான சக்திகள் பலமடைய வழிவகுக்கும் என்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்தார். இந்திய அரசாங்கம் தவறான கூட்டாளியைத் தேர்வு செய்துள்ளது.
இலங்கை அரசாங்கம் எப்போதும் இந்தியாவுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் மேலும் கூறினார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விபரம் வருமாறு:

கேள்வி: தற்போது நடந்து வரும் போரை சந்திக்க என்ன வியூகம் வகுத்துள்ளீர்கள்?

பதில்: நாங்கள் எப்போதுமே கள நிலவரத்தை பொறுத்து பல்வேறு வியூகம் வகுக்கின்றார்கள். எங்கள் மக்களின் உதவியுடன் விடுதலைப் போராட்டத்தில் எந்த முட்டுக்கட்டையையும் கடக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். இந்த போரில் எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுவது தவறு.

கேள்வி: பிரபாகரனை விரைவில் உயிருடன் பிடிப்போம் என்று இராணுவம் அறிவித்துள்ளதே?

பதில்: எங்கள் தலைவர் அவரது பணியை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்.

போர் நிறுத்தத்துக்கு தயார்

கேள்வி: மீண்டும் போர் நிறுத்தத்துக்கு தயாராக இருக்கிறீர்களா?

பதில்: நாங்கள் போர் நிறுத்தத்துக்கோ சமரச பேச்சுவார்த்தைக்கோ எதிரானவர்கள் அல்ல. இலங்கை அரசுதான் 6 ஆண்டுகளாக நீடித்து வந்த போர் நிறுத்தத்தை தன்னிச்சையாக ரத்து செய்தது. தமிழர் தாயகத்திலேயே தமிழர்கள் மீது போர் தொடுத்து வருகிறது.

பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருக்கிறோம்.

பிரியங்கா சந்திப்பு

கேள்வி: வேலூர் சிறையில் நளினியை பிரியங்கா சந்தித்துள்ளாரே?

பதில்: அது ஒரு மனிதாபிமான செயல்.

கேள்வி: நளினி தன்னை சிறையில் இருந்து விடுவிக்குமாறு நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளாரே?

பதில்: இந்திய அரசு தரப்பில் முழுமையான மாற்றம் நிகழும் என்று விடுதலைப் புலிகள் இயக்கம் நம்புகிறது. தமிழ் மக்களின் சட்டபூர்வ உணர்வுகளையும் விடுதலைப் போராட்டத்தையும் இந்திய அரசு அங்கீகரிக்கும் என்று நம்புகிறோம். நளினியின் விடுதலை, அந்த ஒட்டுமொத்த மாற்றத்தின் தொடக்கமாக அமையும்.

ஏனென்றால் ஈழ போராட்டம் பலவீனம் அடைவது இந்தியாவின் நலனுக்கும் நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவுக்கு எதிரான சக்திகள் பலமடைய வழிவகுத்து விடும்.

தமிழக ஆதரவு

கேள்வி: இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி அளித்துள்ளதே?

பதில்: இந்திய அரசு தவறான கூட்டாளியை தேர்வு செய்துள்ளது. இலங்கை அரசு எப்போதும் இந்தியாவுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. மீண்டும் ஒரு முறை இந்தியாவை இலங்கை அரசு ஏமாற்றப் போகிறது?

கேள்வி: தமிழக கட்சிகளின் ஆதரவு பற்றி...

பதில்: அவர்களின் ஆதரவு, தமிழ் ஈழத்தில் உள்ள அவர்களது சகோதர சகோதரிகள் தங்களது விடுதலையையும் சட்டபூர்வ உரிமைகளையும் பெறுவதற்கான ஆதரவு ஆகும்.

1 comment:

Anonymous said...

I'm thankful with your blog it is very useful to me.