Thursday, July 31, 2008

சென்னையில் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர் கைது ரகசிய இடத்தில் விசாரணை

சென்னையில் விடுதலைப்புலி அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

போலீஸ் உஷார்

ஆமதாபாத், பெங்களூர் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த தொடர்குண்டு வெடிப்பு சம்பவங்களால் நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு 2 வெடிகுண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், விடுதலைப்புலிகள் யாராவது தமிழகத்திற்குள் ஊடுருவியிருக்கிறார்களா? என்பது குறித்து கண்காணிக்கும்படி டி.ஜி.பி. கே.பி.ஜெயின் உத்தரவிட்டார். அதன்பேரில், உளவுப்பிரிவு ஐ.ஜி. ஜாபர்சேட், டி.ஐ.ஜி. சங்கர் ஜிவால், சூப்பிரண்டு அசோக்குமார் ஆகியோருடைய நேரடி மேற்பார்வையில், தமிழகம் முழுவதும் கிï பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சென்னையில் விடுதலைப்புலி

சென்னை வளசரவாக்கத்தில் ஒரு வீட்டில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகர் ஒருவர் பதுங்கியிருப்பதாக கிï பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், அந்த வீட்டை கிï பிரிவு போலீசார் நேற்று மாலை அதிரடியாக புகுந்து சோதனை போட்டனர். அப்போது அந்த வீட்டில் இருந்த தம்பி அண்ணா என்ற டேனியல் (வயது 46) என்பவரை பிடித்தனர்.

அவர் இலங்கை கிளிநொச்சியை சேர்ந்தவர் என்றும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் என்றும், கடந்த சில மாதங்களாக அவர் சென்னையில் தங்கியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அவர் எதற்காக சென்னை வந்தார், யார், யாரை சந்தித்து பேசினார், சதித்திட்டம் ஏதாவது தீட்டினாரா? என்பது குறித்து அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடக்கிறது. அவரை பற்றிய முழு விவரங்களையும் டி.ஜி.பி. கே.பி.ஜெயின் இன்று (வியாழக்கிழமை) தெரிவிப்பார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கொள்முதல் பிரிவு தலைவர்

விடுதலைப்புலிகள் அமைப்பில் உளவு பிரிவு, அரசியல் பிரிவு என்று பல பிரிவுகள் உள்ளன. முக்கிய நபர்கள் அந்த பிரிவுகளுக்கு தலைவர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

விடுதலைப்புலிகளுக்கு தேவையான பல்வேறு சாதனங்கள், பொருட்களை வெளிநாடுகளில் இருந்து ரகசியமாக வாங்கி இலங்கைக்கு கொண்டு வருவதற்காக `கொள்முதல் பிரிவு’ உள்ளது. சென்னையில் பிடிபட்ட தம்பி அணணா இந்த பிரிவின் தலைவராக செயல்பட்டு வருபவர் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த தகவலை இதுவரை போலீசார் உறுதிபடுத்தவில்லை.

அதிர்ச்சி

தீவிரவாதிகளால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள சென்னை நகர போலீசார், தற்போது விடுதலைப்புலி ஒருவர் பிடிபட்டிருப்பதால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் வேறு எங்கேயாவது விடுதலைப்புலிகள் பதுங்கி இருக்கிறார்களா? என்பது பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.

No comments: