Thursday, July 31, 2008
இந்திய பிரதமருடன சங்கரி, சித்தார்த்தன், ஸ்ரீதரன் சந்திக்க ஏற்பாடு!
சார்க் மகாநாட்டின் கலந்து கொள்வதற்காக இலங்கை வருகைதரும் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் அவர்களுடன் த.வி.கூ.தலைவர் ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ்(நாபா) அணியின் செயலர் தி.ஸ்ரீதரன் ஆகியோரடங்கிய தமிழ் ஜனநாயக தேசிய கூட்டணியினர் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலவரங்கள், அரசியல் நிலமைகள் தொடர்பாக பேசுவதற்கு ஏற்பாடாகியுள்ளது. அதேவேளை சம்பந்தர், ரவ+ப் ஹக்கீம், ரணில் விக்கிரமசிங்க, இ.தொ.க.தலைவர் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோரும் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment