Tuesday, August 5, 2008

10 ஆயிரம் குடும்பங்கள் தெருவுக்கு வந்தபோதிலும் மாற்று இயக்கங்கள் அமைதியாக பார்வையாளராக இருப்பது ஒரு பொழுதிலும் மன்னிக்கமுடியாத குற்றம்

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் ¨தனது தகவில் மன்னார் மாவட்டத்தின் மடு மற்றும் மாந்தை மேற்குப் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்து 7,000 குடும்பங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தைப் பிரதேசங்களில் இருந்து 1,500 குடும்பங்களும் கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்கு கரையோரப் பகுதியில் இருந்து மேலும் 1,550 குடும்பங்களுமாக 10 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்து கிளி நொச்சிமாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் வடமேற்கே உள்ள பூநகரி பிரதேச செயலகப் பிரதே சத்திலிருந்து மக்கள் ஏறக்குறைய அனை வருமே பாதுகாப்பான இடங்களைத் தேடி இடம்பெயர்ந்துள்ளதாகவும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் மேலும் கூறினார் இருந்தும் இடம் பெயர்ந்தோர்களுக்கு எந்த ஒரு அமைப்பும் உதவிகள் வழங்கவில்லை என்பது மிகவும் கவலைக்குரியவிடையம். இந்த நேரத்தில் உதவிகளை செய்யாது காத்திருக்கும் மாற்று இயக்கங்கள் தமது உதவிகளை எப்பொழுது செய்யப்போகின்றார்கள். அவர்களின் பங்கு மக்களுக்கு எப்பொழுது கிடைக்கும் குறங்;களை சுமத்தி வரும் இவர்கள் எப்பொழுது முழுமையாக மக்களுக்கு உதவ முன்வரப்போகின்றார்கள். இவர்களால் அப்பகுதிக்கு போகமுடியாது என்பது குறிப்பிட்டபோதிலும் உதவிக்காக அத்தியவசியப்பொருட்கள் அனுப்பாது இருப்பதால் மக்கள் விசனம் அதிகரிக்கும் என்றே ஆய்வாளர்களின் கருத்து அதிகரிக்கின்றது.

No comments: