Tuesday, August 5, 2008

தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் இயங்கி புலிகளின் ஆயுத விநியோகத்துக்கு உதவி வந்த தமிழர் புனர்வாழ்வு கழகத்தை தடை செய்தமை இவற்றுள் முக்கியமானதாகும

சகல இன மக்களினதும் நியாயமான அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அதிகாரப் பகிர்வை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வை காண்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் றிச்சர்ட் பௌச்சர் வலியுறுத்தினார். கொழும்பில் நடைபெற்ற 15 ஆவது சார்க் உச்சி மாநாட்டில் அவதானிப்பாளராக கலந்து கொண்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் றிச்சர்ட் பௌச்சர் மாநாடு தொடர்பான தமது அவதானிப்புகளை நேற்று முற்பகல் கொழும்பு டிரான்ஸ் ஏசியா ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட்டார். சகல வடிவிலான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டித்துள்ள தெற்காசிய நாடுகள் பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுப்பதற்கு உறுதி பூண்டுள்ளன. உணவுப் பாதுகாப்பு, சக்தி, காலநிலை மாற்றம், சூழல் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்களில் ஒன்றுபட்டு செயற்படுவதற்கு பிராந்திய நாடுகள் இணங்கியுள்ளமை சிறந்த அம்சமாகும். இலங்கையில் மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக தமது இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். பயங்கரவாதத்துக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு அமெரிக்கா பூரண ஆதரவளிக்கும். விடுதலைப் புலிகளின் ஆயுத விநியோகம் பணப் பரிமாற்றம் உள்ளிட்ட வலையமைப்பை தடுப்பதற்கு அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் இயங்கி புலிகளின் ஆயுத விநியோகத்துக்கு உதவி வந்த தமிழர் புனர்வாழ்வு கழகத்தை தடை செய்தமை இவற்றுள் முக்கியமானதாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட எந்தவொரு பயங்கரவாத அமைப்புக்கும் மன்னிப்பளிக்க முடியாது. இலங்கையில் தொடர்ந்து செல்லும் கடத்தல்கள், காண்ணாமல் போதல், சட்டவிரோத கைதுகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் மிகுந்த கவலையளிப்பதாக உள்ளன. மனித உரிமை மீறல்களை பாதுகாப்பதற்கும் துணை ஆயுதக் குழுக்களின் செயற்பாட்டை கட்டுப்படுத்துவதற்கும் சிறுவர்கள் படையணிகளில் சேர்க்கப்படுவதை நிறுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். அரசாங்கம் நாட்டிலுள்ள சகல மக்களினதும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதேவேளை இனப்பிரச்சினைக்கு சகல இன மக்களினதும் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் அதிகாரப் பரவலாக்கலின் அடிப்படையிலான அரசியல் தீர்வை காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுனாமி புனருத்தாரண வேலைத் திட்டங்களுக்காக 135 மில்லியன்களை அமெரிக்கா வழங்கியது. எமது நிதியில் மேற்கொள்ளப்பட்ட சுனாமி அபிவிருத்தி நிவாரணப் பணிகள் ஏறக்குறையை பூர்த்தியடைந்துள்ளன.இலங்கை மக்களின் பொருளாதார, சமூக, அபிவிருத்திக்கு அமெரிக்கா தொடர்ந்தும் தனது உதவிகளை வழங்கும். உள்நாட்டுப் போர் சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நேய பணிகளையும் அமெரிக்கா ஆற்றி வருகின்றது மேலும் மனித உரிமை மீறல்கள் மிகுந்த கவலையளிக்கின்றன ஜனநாயகத்தை வலுப்படுத்த நடவடிக்கை அவசியம் என்றாh: அமெரிக்க உதவிச் செயலாளர் றிச்சர்ட் பௌச்சர்

No comments: