உலகத்திலேயே இரண்டாவது அதிக கூடுதலான வருமானம் பெறும் பயங்கரவாத அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு விளங்குவதாக ஜேன்ஸ் புலனாய்வு சஞ்சிகையின் ஓகஸ்ட் மாத இதழில் குறிப்பிடப்பட்டிருந்ததை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.விடுதலைப் புலிகள் சட்ட ரீதியான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் வருடாந்தம் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெறுவதாக அந்த சஞ்சிகை கூறியிருந்தது. கப்பல்கள் மூலம் போதைப் பொருள்களைக் கடத்தல் மற்றும் ஏனைய நாடுகளில் இருப்பவர்களை மிரட்டிப் பணம் சேகரித்தல் போன்றவற்றின் மூலமே கூடுதலான நிதியை விடுதலைப் புலிகள் திரட்டிக்கொள்வதாகவும் கொலம்பிய புரட்சிகர இராணுவத்திற்கு அடுத்ததாக விடுதலைப் புலிகள் அமைப்பே கூடுதலான வருமானத்தை ஈட்டுவதாகவும் ஜேன்ஸ் சஞ்சிகை குறிப்பிட்டிருந்தது.உலகின் புகழ்பெற்ற புலனாய்வு சஞ்சிகையின் இந்த கணிப்பு எவ்வளவுதூரம் உண்மையானது என்பதை புலம்பெயர் தமிழ்மக்கள் நன்கு அறிவார்கள்.
கடந்த ஆண்டு சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச மாநாட்டில் புலிகளின் சர்வதேச வலைப்பின்னல் தொடர்பான நீண்ட ஒரு கட்டுரையை சிறிலங்கா வெளிநாட்டமைச்சு நூலாக வெளியிட்டிருந்தது.அதில் புலிகள் எப்படி எப்படி எல்லாம் நிதி திரட்டுகிறார்கள் என்ற விபரம் தெரிவிக்கப்பட்டிருந்தது.அதில், புலிகள் தமிழ்த்திரைப்படங்களை விநியோகிக்கும் வியாபாரத்தில் ஐங்கரன் நிறுவனத்தின் மூலம் ஈடுபட்டிருப்பதை அந்த நூலில் ஒரு அத்தியாயமாக வெளியிட்டிருந்தனர்.ஒரு காலத்தில் ஐங்கரன் தமிழ்த்திரைப்பட விநியோக வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவரை வீழ்த்துவதற்காக புலிகள் தமது பாரிஸ் லூன் இன்ரர்நேசனல் நிறுவனத்தின்மூலம் தாமும் அந்த வர்த்தகத்தில் குதித்தனர். அவர் புலிகளின் போட்டியால் நிலைதடுமாறி- தலைகுப்பற வீழ்ந்தபோது, புலிகளே வழக்கம்போல அவரை தூக்கிநிமிர்த்தி தமது பினாமி ஆக்கினார்கள்.பின்னர் அவர் இந்த வர்த்தகத்தில் புலிகளின் பணத்தில் தனிக்காட்டுராஜாவாக வலம்வருகின்றார்.இன்று ஐங்கரன் நிறுவனம் புலிகளின் பாரிய முதலீட்டால் தமிழகத்தில் தழிழ்த்திரைப்படத்துறையில் கால்பதித்திருக்கின்றது.ஒரே நேரத்தில் பல கோடிகளில் பலபடங்களைத் தயாரிக்கத் தொடங்கியபோது தமிழகத்தில் கோடம்பாக்கமே அதிர்ச்சியில் திக்குமுக்காடிவிட்டது.தமிழ்த்திரையுலகில் பல வருட அனுபவம்வாய்ந்த தயாரிப்பாளர்கள் கூட ஒரேநேரத்தில் ஒரு படத்திற்கு மேல் ஒரேதடவையில் தயாரிக்க முன்வராதபோதிலும் ஐங்கரன் ஒரே நேரத்தில் ஏழு படங்களைத் தயாரித்துவருகின்றது.
புலிகளிற்காக சில லட்சம் ரூபா பெறுமதியான வெடிபொருட்களைக் கடத்தும் சிலரை தேடித்தேடி பிடித்துவரும் கியூ பிரிவு பொலிசாரோ புலிகளின் பணத்தைக் கோடிக்கணக்கில் தமிழகத்தில் முதலிட்டுவரும் ஐங்கரன் நிறுவனத்தைக் கண்டுகொள்ளவில்லை.இன்று தமிழகத்தையே ஐங்கரன் நிறுவனம் தனது பணத்தால் திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றது.சூப்பர்ஸ்ரார் ரஜனியின் படத்தை தயாரிப்பதற்கு தமிழகத்திலேயே பலரும் போட்டிபோட்டுவருகையில், ரஜினி - சங்கர் இணையும் ரோபோ படத்தை 150 கோடி இந்திய ரூபாய் (2 கோடி 50 லட்சம் யூரோ) முதலீட்டில் ஐங்கரன் நிறுவனம் தயாரிக்கவிருக்கின்றது.சில வருடங்களுக்கு முன்னர் ரஜினி ஐரோப்பிய நாடுகளில் கலைநிகழ்ச்சி செய்ய முயன்றபோது அவற்றுக்கு எதிராக போராட்டங்களை நடாத்தி ரஜினியின் முகத்தில் கரிபூசிய புலிகள் இப்போது அவரது படத்தை தயாரித்து அதுவும் 150 கோடி இந்திய ரூபா செலவில் தயாரித்து பணம்பண்ண போகின்றார்கள்.ஒரு காலத்தில் ஐரோப்பாவில் புலம்பெயர் தமிழர்களிடையே ரிரிஎன் தொலைக்காட்சி மூலம் மாதம் மாதம் பல லட்சம் யூரோக்களை வருமானமாகப் பெற்றுவந்தனர் புலிகள்.
சிறிலங்கா அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக அதற்கு பிரான்சில் தடை ஏற்பட்ட காலத்தில் சன் ரீவியும் தனது ஒளிபரப்பைத் தொடக்கியதால் புலிகளுக்கு அந்த வருமானத்தில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது.ரிரிஎன் தொலைக்காட்சிக்குப் பதிலாக தரிசனம் தொலைக்காட்சியைப் புலிகள் தொடங்கியபோதிலும் ரிரிஎன் போல வருமானம் கிடைக்கவில்லை. சன்ரிவிக்குப் போட்டியாக எதனையாவது செய்தால்தான் அந்த வருமானத்தை மீண்டும் பெறலாம் என்று கருதிய புலிகள் சன்ரிவிக்குப் போட்டியாக கலைஞர்ரிவியை ஐங்கரன்மூலம் கொண்டுவந்து மீண்டும் கடை விரித்திருக்கின்றனர். ஐங்கரன் ரிவிக்கான விளம்பரத்தை புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான ஐபிசியே சேகரித்து வருகின்றது. அதுகும் எங்களுடையதுதான் என்று வர்த்தகர்களிடம் நேரடியாகவே புலிகள் கூறிவருகின்றனர்.வன்னியை முழுவதும் இழந்தாலும் பிரபாகரனால் பொறுத்துக்கொள்ளமுடியும், ஏனெனில் அவரால் காட்டுக்குள் இருந்தவாறும் இயக்கம் நடாத்தமுடியும்.ஆனால் கிடைத்துவரும் வருமானத்தில் துண்டுவிழுந்தால் பிரபாகரனால் பொறுத்துக்கொள்ள முடியாது.
- நமது தமிழக செய்தியாளர்
ரஜினியின் ரோபோ திரைப்படம் பற்றிய தகவல்கள்
* ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் ரோபோ படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடி. சிவாஜி படம் ரூ.80 கோடியில் உருவானது குறிப்பிடத்தக்கது.
* ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் ஈரோஸ் மல்டி மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை எடுக்கவுள்ளன.
* இந்திய திரையுலகம் இதுவரை கண்டிராத வகையில் பிரமாண்டமாக, மிகுந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த படம் உருவாக இருக்கிறது.
* தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது.
* இசையுலகில் முடிசூடா மன்னன் ஏ.ஆர்.ரஹ்மான் ரோபோ படத்துக்கு இசையமைக்கிறார். சிவாஜி படத்துக்கும் இவர்தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்த படத்திலும் வியக்க வைக்கும் தொழில்நுட்ப யுத்திகள் பயன்படுத்தப்படுகின்றது.
* ரோபோவை கலையம்சம் மிக்க படைப்பாக உருவாக்க திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.
* ரஜினியுடன் ஜோடி போட நடிகைகள் நான், நீ என்று போட்டி போடும் நிலையில் த்ரிஷா, இலியானா, தீபிகா படுகோன் ஆகிய 3 பேரின் பெயர்களே அடிபடுகிறது.
* படத்தில் நடிக்கவிருக்கும் நடிகைகள் மற்றும் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களை இயக்குனர் ஷங்கர் விரைவில் அறிவிப்பார் என்று ஐங்கரன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
* ரோபோவை தயாரிக்கவுள்ள ஈரோஸ் நிறுவனம் இந்தியில் ஏற்கனவே தேவதாஸ், முன்னாபாய் எம்பிபிஎஸ், ஓம் சாந்தி ஓம், பார்ட்னர் போன்ற பிரமாண்ட படங்களை உலகம் முழுவதும் திரையிட்டுள்ளனர். இந்த நிறுவனம் திரைப்படம், ஸ்டூடியோ, டி.வி. நிகழ்ச்சிகள், ஹோம் என்டெய்ன்மென்ட், இசை ஆல்பம் மற்றும் திரையரங்குகளை பராமரிப்பதிலும் முத்திரை பதித்தவர்கள். இதுதவிர ஷாரூக்கான், ஹிருத்திக் ரோஷன் ஆகிய முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களை தயாரிப்பதுடன் மேலும் 70 இந்தி படங்களை தற்போது தயாரித்து வருகிறது.
* ரோபோவை தயாரிக்கு மற்றொரு நிறுவனமான ஐங்கரன் நிறுவனம் வெளிநாடுகளில் தமிழ் படங்களை திரையிடுவதில் முத்திரை பதித்துள்ளது. இந்நிறுவனம் இதுவரை 1500 படங்களுக்கு விநியோக உரிமை பெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் சிவாஜி, படையப்பா, சந்திரமுகி, முதல்வன், இந்தியன், ஜீன்ஸ், பாய்ஸ், போக்கிரி, கில்லி, சிவகாசி, காதலுக்கு மரியாதை, அலைபாயுதே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கன்னத்தில் முத்தமிட்டால், பில்லா 2007 போன்ற பல வெற்றிப்படங்களை வெளியிட்டுள்ள பெருமை ஐங்கரனையே சாரும்.
* ரோபோ படத்தின் பி.ஆர்.ஓ. (மக்கள் தொடர்பு அதிகாரி) பி.ஆர்.ஓ. டயமண்ட் பாபு.
* ரோபோவை தயாரிக்கும் ஐங்காரன், ஈரோஸ் நிறுவனங்களில் அலுவலகம் சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ராஜ்பாரிஸ் திரிமேனி டவர்ஸ் மூன்றாவது தளத்தில் இயங்கி வருகிறது.
தேணி இணையம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment