Wednesday, August 6, 2008

சீனாவிலும் தனிநாடு கேட்கிறார்கள்

சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பிங்ஜியாங் மாநிலத்தில் போலீஸ் நிலையம் மீது கையெறி குண்டுகளை தீவிரவாதிகள் வீசினார்கள். இதில் 16 சீன போலீஸ்காரர்கள் பலியானார்கள். 16 பேர் காயம் அடைந்தனர். சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ளது ஷிங்ஜியாங் மாநிலம். இது சுயாட்சி அதிகாரம் பெற்ற பிரதேசம் ஆகும். இங்கு உய்குர் எனப்படும் பழங்குடி இன முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். அவர்கள் கிழக்கு துருக்கிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு கோரி சிறிய அளவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எண்ணை வளம் உள்ள இந்த மாநிலத்தில் 83 லட்சம் உய்குர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த 60 ஆண்டு காலத்தில் அடக்கி ஒடுக்கப்படுவதாக நினைக்கிறார்கள். இந்த மாநிலத்தை சேர்ந்த தீவிரவாதிகள் பிஜிங்கில் நடக்கும் ஒலிம்பிக் போட்டி நிகழ்ச்சிகளுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடும் எனறு சீனா அதிகாரிகள் எதிர்பார்த்தனர். அவர்கள் தான் ஒலிம்பிக் போட்டிக்கு மிகப்பெரிய ஆபத்தாக இருப்பார்கள் எனறு சீன ராணுவ அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர். இந்த தீவிரவாதிகள் வருகிற 1-ந் தேதி முதல் 8-ந் தேதிக்குள் தாக்குதல் நடத்துவார்கள் என்றும் எச்சரித்து இருந்தனர். ஒலிம்பிக் போட்டி தொடங்கப்படுவதற்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நேற்று போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தினார்கள். காஷ்கர் என்ற இடத்தில் காலை 8 மணிக்கு இந்த தாக்குதல் நடந்தது. 2 தீவிரவாதிகள் ஒரு லாரியை ஓட்டிவந்து போலீஸ் நிலையத்தின் மீது மோதச் செய்தனர். அவர்கள் லாரி மோதுவதற்கு முன்பு அதை விட்டு இறங்கி விட்டனர். அதன் பிறகு உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர்களை கத்தியால் குத்தினார்கள். இந்த 2 சம்பவங்களிலும் 14 போலீஸ்காரர்கள் அந்த இடத்திலேயே பலியானார்கள். காயம் அடைந்த 2 போலீஸ்காரர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்துபோனார்கள். இது தவிர 16 போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காஷ்கர் நகரில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இதில் தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகளும் பிடிபட்டனர்.

1 comment:

Anonymous said...

Ive read this topic for some blogs. But I think this is more informative.