Monday, August 11, 2008
வன்னியை பிடிப்பதாக சிங்களவர்களை நம்பவைத்து தமிழர்களை வதைக்கும் அரசின் தார்மீகம்
முல்லைத்தீவில் விமானத் தாக்குதல் மற்றும் ஷெல் தாக்குதல்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இடதுசாரி முன்னணியின் அமைப்பு செயலாளரும் சப்ரகமூவ மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளருமான சமில் ஜயநித்தி இவ்வாறு தெரிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்திக் கொண்டு பிரதேசங்களை கைப்பற்றும் படையினர் பாரிய இழப்புக்களை சந்திக்கும் நிலை தோன்றியுள்ளது. தமது கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் நுழைய முனைந்தால் கடுமையான இழப்புக்களை சந்திக்க நேரிடுமெனத் தெரிவிக்கும் புலிகள், தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் அரசாங்கம் விமானத் தாக்குதல்களை நடத்துகிறது. புலிகளின் நிலைகள் மீதுதாக்குதல் நடத்தப்பட்டதாக அரச தரப்பினர் தெரிவிக்கின்றனர். ஆனால், சிறு குழந்தை இறந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு அரசாங்க அதிபரும் காயமடைந்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் சர்வதேசரீதியில் புலிகளுக்கு சாதகமான தன்மையை உருவாக்கும். யுத்தத்தாலோ, தமிழ் மக்களை கொல்வதாலோ இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. எனவே, சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து அரசியல் தீர்வைக் காண முயல வேண்டும். அதைவிடுத்து தான்தோன்றித்தனமாக அரசு தீர்மானங்களை மேற்கொள்வது நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும். தமிழ் மக்கள் நசுக்கப்படும் சூழ்நிலையில் சப்ரகமூவ, வடமத்திய மாகாண சபைத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. இதில் தமிழ் மக்களுக்காக உண்மையிலேயே குரல் கொடுப்பவர்களுக்கு தமிழ் பேசும் மக்கள் வாக்களித்து அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பைக் காட்ட வேண்டும். தென்பகுதி சிங்கள மக்கள் மத்தியில் வன்னியை கைப்பற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி மாகாண சபைத் தேர்தல்களில் வெற்றி பெறவே தமிழ் மக்கள் அழிக்கப்படுகின்றனர் என்று இடதுசாரி முன்னணி நாட்டின் நிலைப்பாட்டையும் தமிர்கள் என்ன செய்யவேண்டும் என்றும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார் ஆனால் தமது உரிமையை தமிழர்கள் புறக்கனிப்பது சரியா?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment