Tuesday, August 5, 2008

வீ.ஆனந்தசங்கரியாரே!

அறிவிலார்கு உரைப்போர் அவரிலும் மூடராம் அதுபோன்றுதான் ஆனந்தசங்கரியார் பிரபாகரனுக்கு கடிதம் எழுதுவது.....



வீ.ஆனந்தசங்கரியாரே!

நீங்கள் எங்கட தலைவருக்கு கடிதம் எழுதி அட்வைஸ் கொடுப்பதற்கு முதல் நீங்கள் முதலில் ஒழுங்காக தமிழை கற்றுக்கொள்ளுங்கள். நீர், உமக்கு, அறிவீர் அய்சேர் என்றெல்லாம் கொட்டடி கொசப்புகள்தான் இப்படி கதைப்பார்கள். சிலநேரம் வல்வெட்டிதுறையார் இப்படி கதைக்கிறார்களோ நமக்கு தெரியவில்லை. ஆனால் தமிழில் நீ என்று எழுதவேண்டும் அல்லது நீங்கள் என்று எழுதவேண்டும். உங்களுக்கு தமிழில் கடிதம் எழுததெரியாவிட்டால் யாரிடமாவது கேட்டு எழுதுங்கோ.

உலகமாகா ரவுடிக்குதான் நீங்கள் கடிதம் எழுதியிருந்தாலும் ஓர் அளவுக்கேனும் ஒருமைத்தன்மையில் (நீ)) என்று கடிதம் எழுதியிருக்கவேண்டும் அல்லது பன்மைத் தன்மையில் (நீங்கள்) என்று எழுதியிருக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு நீர், உமக்கு, அறிவீர் என்று எல்லாம் எழுதியிருக்கிறீங்கள். உங்கள் கடிதத்தை வாசிப்பவர்கள் உங்கள் தகுதியை பற்றி என்ன நினைப்பார்கள்?

நீர் வாரும், நீர் போகறீரே, உமக்கு, உமது, அறிவீர், அய்சேர், இந்த சொற்கள் எல்லாம் தமிழ் சொற்கள் அல்ல. எங்களுக்கு தெரிந்து யாழ் குடாநாட்டில் உள்ள கொசப்புக்கள்தான் இப்படி கதைப்பார்கள். மற்றும்படி நல்ல பண்பாடு தெரிந்த யாழ்பாணத்து தமிழர்கள் தெரியாத சின்னப்பிள்ளையை பார்தே நீங்கள் என்றுதான் அழைப்பார்கள். நல்லாக நெருங்கிய உறவுகளை அதுவும் தங்கள் வயதுக்கு இளமையானவர்களை அல்லது நெருங்கிய சிநேகிதம் கொண்டவர்களைதான் நீ என்று அழைப்பார்கள் மற்றவர்களையும், எங்கள் வயதுக்கு மேற்பட்டவர்களையும் நாங்கள், உங்கள் என்றுதான் அழப்பார்கள்.

நீங்கள் கிளிநொச்சி மக்களோடு வாழ்ந்து வளர்ந்து அம்மக்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி கிராமசபை தலைவராகவும், கிளிநொச்சியின் நகரசபையின் முதல் தலைவராகவும் பணியாற்றியதாக சொல்கிறீங்கள் கிழிநொச்சி மக்களுக்கு இந்த நீர், நெருப்பு, என்பதெல்லாம் விளங்கியிருக்காதே அப்படியிருக்க நீங்கள் எப்படி அந்த மக்களுடன் பழகினீர்கள்?

பிரபாகரன் தமிழனை கொலைசெய்கிறான். நீங்கள் தமிழை கொலைசெய்கிறீர்கள். உங்களுக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம். தமிழ் தெரியாதவர்கள் தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தபோய்தான் தமிழர்கள் இன்று இந்த நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

உங்களுக்கு தெரியுமா வெளிநாடுகளிலிருந்து 'தமிழீழம்' என்ற நாடு கேட்பவர்களின் தகுதியை பற்றி?

தமிழீழ நாடு கேட்கும் ஒரு நபரிடம் நான் கதைக்கும் பொழுது சொன்னேன் எங்களுடைய ஊரில் நிறைய கற்பகதருகள் (பனை) இருக்கிறது என்றுசொன்னேன். அவர் என்னை பார்த்து திருப்பிகேட்கிறார் கற்பகதரு என்றால் என்ன அண்ணை என்று கேட்கிறார். தமிழீழம் வேண்டும் என்று வெளிநாட்டில் இருந்து கேட்கும் இன்னுமொரு நபர் ஒருவரிடம் கேட்டேன் நீங்கள் இலங்கையில் எந்த மாவட்டதில் இருக்கிறீர்கள் என்றுகேட்டேன் அவர் சொல்லுகிறார் தான் குப்பிளான் மாவட்டமாம் என்கிறார். தான் எந்த மாவட்டத்திலிருந்து வந்தவர் என்று அறியாத இவர்களை போன்ற அறிவிலிகள்தான்; வெளிநாடுகளிலிருந்து நாடுவேணும் என்று கேட்பவர்கள். இவர்களை போன்ற அறிவலிகளில் ஒருவர்தான் பிரபாகரன். அவருக்குபோய் நீங்கள் கடிதம்போடுவது 'அறிவிலார்கு உரைப்போர் அவரிலும் மூடராம்" என்ற மாதிரியான கதைதான். நீங்கள் எத்தனை தடவைதான் பிரபாகரனுக்கு கடிதம்போடப்போகிறீர்கள்? செவிடன் காதில் சங்கு ஊதிய கதைபோன்றதுதான் பிரபாகரனுக்கு நீங்கள் கடிதம்போடுவதாகும்.

ஆனந்தசங்கரியாரே!
உங்களுக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான உறவு எப்படிபட்டது என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் உங்களுக்கு நாங்கள் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறோம் அதாவது நீங்கள் எங்கட தலைவருக்கு கடிதம் எழுதி அட்வைஸ் கொடுக்காதீங்கள் எங்கட தலைவருக்கு எல்லாம் தெரியும். எங்கட தலைவர் வன்னியில் இருக்கும் கடைசி தமிழனை சாகடிக்கும்வரை தான் போராடபோறதாக 2007ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதியே உறுதியாக சொல்லிபோட்டார். அதனால உங்கட அட்வைசை வேறு யாருக்காவது போய் சொல்லுங்கோ. அவர் தனிநாட்டுக்காக போராடுகிறார் என்று உங்களுக்கு எப்பொழுதாவது எங்கட தலைவர் சொன்னவரா? என்ன புலம்புகிறீர்கள் நீங்கள்?

2006 ஆம் ஆண்டு மாவீரர் உரையில் (மற்றவனின் பிள்ளைகளை சாக்காட்டிய தின நாள் உரையில்) எங்கட தலைவர் சொன்னது தனியரசை அமைக்கபோவதாக என்பதே ஒழிய தனிநாட்டை அமைக்கபோவதாகவோ அல்லது தமிழீழத்தை அமைக்க போகிறதாகவோ அவர் எப்பொழுதுமே சொன்னதில்லையே? தனியரசு என்பதன் அர்தமானது தமிழீழ பிரதேசத்தை முழுமையாக கைப்பற்றி அங்கு வாழும் தமிழர்களை எங்குமே வெளியில் போகவிடாமல் வைத்துகொண்டு, அதாவது தான் எப்படி எங்குமே தலைகாட்டாமல் இருக்கிறாரோ அதேபோன்று தமிழர்களை தனதுபிடிக்குள் வைத்துக்கொண்டு ஒரு ரவுடிதனமான ஆட்சியை நடத்துவதுதான் அவர் அமைக்விருந்த தனியரசு என்ற சொல்பததின் அர்தமாகும்.

பிரபாகரன் எந்த ஒரு காலத்திலும் தன்னுடைய வாயால் தான் தமிழீழத்துக்காக போராடுபோவதாக சொன்னதில்லை. புலிகளின் தாகம் தமிழீழதாயகம் என்பதே ஒழிய தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்று அவர்கள் எப்பொழுதாவது குறிப்பிட்டுள்ளார்களா?

தமிழீழத்துக்கு போராடுகிறார் என்றால் உங்கள் தலைவர் அமிர்தலிங்கத்திலிருந்து தமிழர்களிடையே இருந்த ஒட்டுமொத்த தமிழர் தலைவர்களை ஏன் அழிக்கவேண்டும். புலிகள் இயக்கம் தமிழீழத்துக்கும் போராடவில்லை ஒரு மண்ணாங்கட்டிக்கும் போராடவில்லை பிரபாகரன் என்கின்ற 'ரவடி' தான் மட்டும் தமிழர்களுக்கு தலைவராக இருக்கவேண்டும் மற்ற எந்த ஒரு தலைவரும் தமிழர்களிடையே தலை எடுக்ககூடாது, அதோடு ஆயுதமுனைகளில் தமிழர்களை அடக்கி, ஒடுக்கி வைத்துகொண்டு பயங்கரவாதத்தை நாளாந்தம் தோற்றுவித்து, பயங்கரதாக்குதல்களை நடத்தி பிணங்கள் வீழ்தி காட்டுவதன் மூலம் வெளிநாட்டில் உள்ள அவரின் விசுகோத்து கூட்டங்களிடமிருந்து பணம் வாங்வேண்டும் என்பதுதான் பிரபாகரனுடைய போரட்டத்தின் இலச்சியமாகும் என்பதை நீங்கள் முதலில் விளங்கிகொள்ளுங்கள்.

நீங்கள் முன்வைக்கிற ஐந்து கோரிகைகளையும் எந்தவொரு காலத்திலும் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். அவர் உறுதியாக கடைபிடிக்கும் ஐந்துகொள்கைகள் எவை என்றால் கொலை, கொள்ளை, கப்பம், கடத்தல், குண்டுவைத்தல் இவைகள்தான். இந்த கொள்கைகளை உங்கள் கோரிக்கைகளாக முன்வைத்து ஏற்றுக்கொள்ளும்படி அவருக்கு சிபாரிசு பண்ணிபாருங்கள் இவைகளை அவர் கட்டாயம் ஏற்றுக்கொள்வார்.

நன்றி.கி.பாஸ்கரன்

No comments: