Monday, August 4, 2008

டக்ளஸ் தேவானந்தாவிற்கு இறுதி எச்சரிக்கை

பிரபாகரன் தலைமையிலான பாஸிஸப் புலியின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து அதனால் விட்டுச்செல்ல இருக்கும் இடத்தினை ஆக்கிரமிப்பதன்மூலம் கிழக்கு மாகாணத்தில் மீண்டும் யாழ் மேலாதிக்கத்தினை நடைமுறைப்படுத்தலாமென டக்ளஸ் தேவானந்தா கனவு காணமுற்பட்டால் அதுவிடயம் டக்ளஸின் அரசியலுக்கு அழிவை உருவாக்குமே தவிர ஆக்கத்தினை உருவாக்கமாட்டாது. 1994 ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 10.460 வாக்குகளைப்பெற்று 09 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றதன்மூலம் அரசியலில் காலடி எடுத்துவைத்த ஆயுததாரியும், முன்னைநாள் பயங்கரவாதியுமான டக்ளஸ் தேவானந்தா 41.936 வாக்குகளைப் பெற்று கிழக்கின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை பிள்ளையான் குழு என அழைப்பதனை நிறுத்திக்கொள்வது அவரது சுயகெளரவத்திற்கு நல்லதென நாம் கூறிவைக்க விரும்புகின்றோம். அல்லது டக்ளஸின் கடந்தகால வரலாறுகள், கொலைகள், கொள்ளைகள் போன்றவை தொடர்ச்சியாக வெளிவரும் என்பதனையும் அவருக்கு கூறிவைக்க விரும்புகின்றோம்.

ஈ.பி.டி.பியின் இணையத்தளத்தில் வெளியான செய்தியினை வாசகர்களின் கவனத்திற்கு இங்கு தருகின்றோம்.

பிள்ளையான் குழுவினரால் கடத்தப்பட்டோரில் ஒருவர் தொடர்ந்தும் தடுத்துவைப்பு.

மட்டக்களப்பு ஏறாவூரில் பிள்ளையான் குழுவினரால் நேற்றுமுன்தினம் இரவு கடத்திச்செல்லப்பட்ட ஐவரில் நால்வர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு ஏறாவூர் மூன்றாம் குறிச்சியில் நேற்றுமுன்தினம் இரவு 8.15 அளவில் ஐந்து முஸ்லிம்கள் கடத்திச்செல்லப்பட்டனர். கடற்றொழில் சங்கத்தலைவரான சமது மற்றும் ஒரு ஆசிரியர் உட்பட்ட ஐந்துபேரே கடத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் பிரதேசத்தில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்த வேளையில் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளது. வெள்ளைவானில் சென்ற பிள்ளையான் குழுவினரே இவர்களை கடத்திச்சென்றதாக நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஏறாவூரில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்ட்டது. கடத்திச்செல்லப்பட்டவர்கள் குறிப்பிட்டதொரு கட்சியின் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு அரசியல் பின்னணியும் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

இவர்கள் பிள்ளையான் குழுவினரின் கல்லடி அலுவலகத்தில் விசாரணை செய்யப்பட்டபின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்;. எனினும் எஸ் எஸ் சமத் என்ற 42 வயதானவர் இன்னும் விடுவிக்கப்படவில்லை. சமத், ஏறாவூர் கடற்றொழிற் சங்கத்தின் தலைவரும் முஸ்லிம் பள்ளிவாசல் சம்மேளனத்தின் உறுப்பினருமாவார். நான்கு நாட்களுக்கு முன்னர் பிள்ளையான் ஆயுதக்குழுவினர் சமத்தின் வீட்டை சோதனை செய்தனர். பின்னர் நேற்றுமுன்தினம் சோதனை செய்தநிலையிலேயே அவரையும் ஏனைய நான்கு பேரையும் அவர்கள் கடத்திச்சென்றதாக ஊரவர்கள் தெரிவித்துள்ளனர்

விழிப்பு

No comments: