- சேந்தன்
தலைவர்; மௌனமாயிருக்கிறார்.; ஏதோ திட்டம் வைத்திருக்கிறார்.
போரை நான் பாத்துக் கொள்ளிறன் அரசியலை நீங்கள் கவனியுங்கோ
எண்டு கூத்தமைப்புக்காரரிட்டை தலைவர் சொல்லியிருக்கிறாh.; தலைவற்
ரை திட்டம் என்னவென்று அறிய பலர் ஆவலாக இருக்கினம். உள்ளுக்
கை விட்டுட்டு அடிக்கப் போறார் அதுதான் ஆமிக்காரனை உள்ளுக்கை
விடுகிறார் எண்டு சிலர் கதைக்கினம். உள்ளுக்கை விட்டுட்டு அடிக்
கிறதுக்கு எங்கடை தலைவரைக் கேட்டுத்தான். உப்பிடி எத்தினை தரம்
உள்ளுக்கை விட்டுட்டு அடிச்சவர். இந்தியன் ஆமி போன கையோடு யாழ்
ப்பாணத்தை ஆக்கிரமிச்ச புலிகள் குடாநாடு புலிகளின் பூரண கட்டுப்பாட்
டில் என்று கொஞ்சக் காலம் வீராப்புப் பேசிக் கொண்டிருந்தவர்கள்.
தமிழீழ நீதிமன்றம்,தமிழீழ காவல்துறை,தமிழீழ அரசாங்கம் எண்டு இப்ப
வன்னியிலை காட்டிற விளையாட்டுகள் மாதிரி யாழ்ப்பாணத்திலை காட்
டினவர்கள். பனம்பழம் சாம்பல் போட்டு உடுப்புத் தோய்ச்சு ஓடிக்
கொலோனிலை மோட்டார் சைக்கிள் ஸ்ராட் பண்ணி மண்ணெண்ணை
விட்டு ஓடி அன்றைய குடாநாட்டுத் தமிழீழத்திலை பதிய கண்டு பிடிப்பு
களோடை ஒரு கலக்குக் கலக்கினவர்கள். 95ம் ஆண்டு யாழ்பாண
முகாம்களுக்கள் முடங்கிக் கிடந்த ராணுவம் மும்முனைகளிலும் முன்
னகரத் தொடங்கியது. பலாலியிலிருந்து இராணுவத்தின் முன்னகர்வினை
மாவிட்டபுரத்திலிருந்தும் வசாவிளானிலிருந்தும் புலிகள் முறியடித்தனர்.
பின்னர் புலிகள் வசாவிளானிலிருந்து முன்னகர்வை முறியடித்தபடியே பின்
னகர்ந்து புன்னாலைக்கட்டுவன், ஊரெழு, உரும்பிராய், கோண்டாவில்,
திருநெல்வேலி, கந்தர்மடம், பின்னர் யாழ்ப்பாணத்தால் திரும்பி
அரியாலை. நாவற்குழி, கைதடி, சாவகச்சேரி, முகமாலைவரை சென்
றனர். புலிகள் வன்னிக்குச் சென்று செற்றில் ஆகும்வரை அவர்களின்
முன்னகர்வு முறியடிப்புகளையும் இறந்த இராணுவத்தின் எண்ணிக்
கையையும் புலிகளின் ஊடகங்கள் புலம்பெயர் தமிழர்களுக்கு அறிவிக்
கத் தவறவில்லை. ஒரு கடையொன்றில் நின்று கொண்டிருந்தபோது
கடைக்காரர் சொன்னார் பொடியள் ஆமியை உள்ளுக்கை விடுகிறாங்கள்
ஏதோ செய்யப் போறாங்கள் போலை என்று. இதைக் கேட்டுக்கொண்
டிருந்த இன்னொருவர் நகைச்சுவையாகச் சொன்னார், ஓம் தம்பி
ஆமியை உள்ளுக்கை விட்டிட்டு சுத்திவர நின்று குசு விடப்போறாங்கள்
போலை கிடக்கு. புலிகளின் முன்னகர்வு முறியடிப்புகளை முறியடித்த
ராணுவம் குடாநாடு முழுவதையும் கைப்பற்றி இன்று பதின்மூன்று
வருடங்களாகிவிட்டது. இன்றுவரை புலிகளால் மீண்டும் யாழ் குடாநாட்
டைக் கைப்பற்ற முடியவில்லை.
மாவிலாறு அணையைப் பூட்டி முன்னகர்வு முறியடிப்புகளை புலிகள் கிழக்
கில் ஆரம்பித்து வைத்தனர். மூதுரைக் கைப்பற்றி பின்னர் வெற்
றிகரமாகப் பின்வாங்கி சம்பூரில் ராணுவத்தின் முன்னகர்வை முறியடிக்
கத் தொடங்கி யாழ்குடாநாடு போலவே சம்பூரில் தொடங்கி குடும்பி
மலை வரை பின்னகர்ந்து கிழக்கு மாகாணத்தை விட்டு முற்றாகப் பின்
னகர்ந்து வன்னிக்குள் செற்றில் ஆகினார்கள். வன்னியைக் கைப்பற்றும்
படையினரின் முன்னகர்வை மன்னாரில் நின்று பல தடவைகள் முறியடித்
ததாகக் கூறிய புலிகள் இன்று வவுனிக்குளத்தில் இராணுவத்தின்
பாரிய முன்னகர்வை முறியடித்ததாக கூறுகிறார்கள். புலிகளின் இந்தச்
செய்தியின் மூலம் ராணுவம் வவுனிக்குளம் வரை சென்றுவிட்டது என்
பதை புலிகள் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஈழநாசம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment