சார்க் உச்சி மாநாட்டின் நிறைவு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்துக்கு வருகை தந்த நேபாளப் பிரதமர் கிரியா பிரசாத் கொய்ராலா கால் தடக்கி விழுந்த சம்பவம் இடம்பெற்றது.
நேற்று பிற்பகல் சார்க் அமைப்பின் தலைவரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் சார்க் உச்சி மாநாட்டின் நிறைவு வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்குபற்றுவதற்காக சார்க் வலய நாடுகளின் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக அழைத்து வரப்பட்டனர்.
நேபாளப் பிரதமர் பிரசாத் கொய்ராலா வாகன பவனியாக
அழைத்து வரப்பட்டார். மண்டபவாயிலில் காரால் இறங்கிய இவரை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பிரதான மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார். இவ்வாறு அழைத்துச் செ ல்லப்பட்ட பிரசாத் கொய்ராலா பிரதான மண்டப வாயிலுக்கு அருகில் கால் தடக்கி திடீரென கீழே விழுந்தார். இதனை எதிர்பார்க்காத வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் அவரை தூக்கினர். அதன் பின்னர் அவர் பிரதான மண்டபத்துக்குச் சென்றார்.
பிற்பகல் 3.35 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றது.
நேபாளப் பிரதமர் பிரசாத் கொய்ராலாவுக்கு வயது 83 ஆகும். சார்க் உச்சி மாநாட்டுக்கு வருகை தந்த தலைவர்களில் வயது முதிர்ந்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment