மன்னாரில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 58ஆவது படையணியினர் தற்போது தமது நிலைகளிலிருந்து முன்னேறி கிளிநொச்சி மாவட்டத்துக்குள் முன்னகர்ந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார்.
இதன் பிரகாரம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு ஆகிய இரு மாவட்டங்கள் மடடுமே படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது
ஈழப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் அதிசக்தி வாய்ந்த கட்டுப்பாட்டுத் தளமாக விளங்கும் கிளிநொச்சி மாவட்டத்துக்குள் படையினர் தெற்கிலிருந்து முன்னகர்வை மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பமாகவே இது கருதப்படுகிறது.
இதுவரையில் வடக்கிலிருந்து மட்டுமே படையினர் கிளிநொச்சி மாவட்டத்துக்குள் பிரவேசித்தனர். ஆயினும் இம்முறை படையினரால் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி படையினருக்கு கிடைத்த பாரிய வெற்றியே ஆகும். கடந்த வருடம் மன்னார் பிரதேசத்திற்குள் முன்னகர்ந்த இராணுவத்தின் 58ஆவது படையணியினர் விடத்தல் தீவு, இலுப்பைக்கடவை, மற்றும் வெள்ளாங்குளம், என்று தொடர்ந்தும் தமது முன்னகர்வு முயற்சிகளை மேறந்கொண்டு ஏ32 வீதியினூடாக கிளிநொச்சி மாவட்டத்துக்குள் முன்னகர்ந்துள்ளனர்.
இதேவேளை நாட்டின் இடதுபுற கடற்கøரப் பிரதேசம் முழுவதம் தற்போது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிõப்பிடத்தக்கது. இதனால் விடுதலைப் புலிகளின் கடல்மார்க்க நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ உள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு ஆகிய இரு மாவட்டங்களும் வெகு விரைவில் படையினரால் கைப்பற்றப்படவுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment