கிளிநொச்சி பரந்தன் பகுதியிலிருந்து தப்பிச்சென்ற 17பொதுமக்கள் நேற்று யாழ்ப்பாணம் கிளாலியிலுள்ள விடத்தல்பளைப் பிரதேச இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது..
இக்குழுவில் 4 சிறுமிகளும் 1 சிறுவனும் 5 ஆண்களும் 7 பெண்களும் அடங்குவதாகவும் அவர்களுக்கான அத்தியாவசிய வசதிகளைப் படையினர் வழங்கியுள்ளனர். வவுனியாவில் உள்ள உள்ளக இடம்பெயர்வுக்கான இடைத்தங்கல் முகாமுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..
பாதுகாப்புத்தேடி வந்துள்ள அவர்கள் தாம் புலிகளின் கட்டுப்பாட்டில் சொல்லொணாத் துயரங்ளை அனுபவித்ததாகவும் அத்துயரங்களைத் தொடர்ந்தும் அனுபவிக்க முடியாமையால் தம் உயிர்களைப் பணயம் வைத்தே இவ்வாறு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளனர் எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment